பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 29 |

மைமைப் பெற்று விளங்கும் திருவருளை. பெற-அடையும் பொருட்டு. ப்:சந்தி. பிரியாத-விட்டுப் பிரிய முடியாத இயல்பைப் பெற்ற. விடை-விடையை பெற்று-அந்த நடராஜப் பெருமானாரிடம் பெற்றுக் கொண்டு. ப்: சந்தி. பொன்னின்-தங்கத் தகடுகளால் வேயப்பெற்ற: ஆகுபெயர். அம்பலம்-திருச்சிற்றம்பலத்தை சூழ்ந்து-சுற்றி வலமாக வந்து. தாழ்ந்து-தரையில் விழுந்து அந்த நடராஜப் பெரு மானாரை மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டு. எழுந்துபிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. போந்துமேலே எழுந்தருளி. புற-திருக்கோயிலுக்கு வெளியில் உள்ள. முன்றில்-முற்றத்தை அணைந்தார். அந்த நாய னார் அடைந்தார். -

அந்தத் திருப்பதிகத்தில் உள்ள திருக்கடைக்காப்புப் பாசுரம் வருமாறு:

நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான் மறை வல்ல ஞானசம் பந்தன் ஊறும் இன்தமி ழால் உயர்ந்தார்

. உறை தில்லை தன்னுள் ஏறு தொல்புகழ் ஏத்துசிற் றம்பலத் தீசனை யிசையாற் சொன்ன பத்திவை கூறு மாறு வல்லார் உயர்ந் தாரொடும் கூடுவரே."

பின்பு உள்ள 176-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானாருடைய திருக்கோயிலுக்கு வெளியில் உள்ள முற்றத் தில் இருந்தபடி அந்த நடராஜப் பெருமானாரைப் பணிந்து அந்த இடத்தில் நடராஜப் பெருமானார் வழங்கிய திருவருளோடு அழகிய மாணிக்கங்களைப் பதித்த கதவு களைப் பெற்ற கோபுர வாசலில் இருந்தபடி தோற்றப் பொலிவு உண்டாகுமாறு அந்த நடராஜப் பெருமானாரை மீண்டும் ஒருமுறை தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தம்முடன்