பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பெரிய புராண விளக்கம்.19

செங்கை யாழ்த்திரு நீலகண் டப்பெரும்

பாணனா ருட ன் சேர

மங்கை யார் புகழ் மதங்கசூ ளாமணி

யாருடன் வரவங்தார். '

பொங்கு-பொங்கி எழும். தெண்-தெளிவாக உள்ள. திர்ை-அலைகளை வீசும்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. புனித-தூய. நீர்-புனல் ஒடும். நிவாக்கரை-நிவா நதியினுடைய கரைக்கு. க்: சந்தி, குடதிசை மிசை-மேற்குத் திசையில். ப்: சந்தி, போந்து-எழுந்தருளி. தங்கு-சீகாழியில் தங்கிக் கொண்டிருந்த, தந்தையாருடன்-தம்முடைய தந்தை யாராகிய சிவபாத இருதயரோடு. பரிசனங்களும்-தம் முடைய பரிவார மக்களும். தவமுனிவரும் - தவத்தைப் புரிந்த அந்தணராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரும். செல்ல-எழுந்தருள, ச். சந்தி. செங்கை-தம்முடைய சிவந்திருக்கும் கையில். யாழ்-யாழை வைத் திருக்கும். த்: சந்தி. திருநீலகண்டப் பெரும்பாணனார்-திருநீலகண்டத்து யாழ்ப்பெரும் பாண நாயனார். உடன்-தம்மோடு: என்றது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு என்பதை. சேரசேர்ந்து வர. மங்கையார்-மங்கைமார்கள்: ஒருமை பன்மை மயக்கம். புகழ்-புகழ்ந்து பாராட்டும். மதங்க சூளா மணியார்-அ ந் த ப் பெரும்பாணருடைய தர்மபத்தினி. யாராகிய மதங்க சூளாமணியார். உடன் வர-தம்மோடு வர. வந்தார்-யாவரும் வந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு உள்ள 178-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"பெரியவையாக இருக்கும் தடாகங்களையும், வயல், களையும் தாண்டி மேலே எழுந்தருளித் திருஎருக்கத்தம், புலியூருக்குப் பக்கத்தில் எழுந்தருளிச் சேரத் திருநீல கண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனார் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பணிந்து, மேகங்கள் நெருக்கமாகத் தவழும் பூம்பொழில் சுற்றியிருக்கும் இந்த ஊர் அடியேனுடைய ஊர்' என்று கூற நெடுநேரம்