பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 3罗莎

அளிப்பதாக இருக்கிறது. என்பவர் தாங்கள்-என்று கூறுபவர்களாகிய அந்த அடியவர்களாகிய தாங்கள். அம்மறையோர்கள்.அந்த வேதியர்களுக்கு. முன்-முன்னால். சாற்றினார்-பின் வருமாறு கூறினார்கள்: ஒருமை பன்மை

மயக்கம்.

அடுத்து வரும் 200-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு : 'அந்த வேதியர்களும் மற்றவர்களும் அதிகமாகவும் மிகுதியாகவும் அமைந்த வியப்பை அடைந்த பான்மை யினுடைய பக்கத்தை அடைந்தவர்கள் ஆனவுடன் அரத் துறை நாதருடைய திருப்பள்ளி எழுச்சிக்கு உரிய நேரம் வந்து சேர விருப்பத்தினுடைய வழியில் உண்டாகும் செள கீல்யத்தை மிகுதியாக உடைய சிவாசாரியர்கள் திருக் கோயிலின் வாசற் கதவைப் பூட்டியிருக்கும் அழகிய பூட்டைத் திறந்து அகற்றினார்கள். பாடல் வருமாறு:

சால மிக்க வியப்புறு தன்மையின் பால ராதலும் பள்ளி எழுச்சியின் காலம் எய்திடக் காதல் வழிப்படும் சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.'

சால-அந்த வேதியர்களும் மற்றவர்களும் அதிகமாகவும். மிக்க-மிகுதியாகவும் அ ைம ந் த. வியப்பு உறு-வியப்பை அடைந்த தன்மையின் பாலராதலும்-பான்மையினுடைய பக்கத்தை அடைந்தவர்கள் ஆனவுடன். பாலர் : ஒருமை பன்மை மயக்கம். மிகுதியான வியப்பை அடைந்தவர்களாக விளங்கினார்கள் என்பது கருத்து. ஆதலும்-ஆனவுடன். பள்ளி எழுச்சியின்-அரத்துறைநாதருடைய திருப்பள்ளி எழுச்சிக்கு உரிய, காலம்-நேரம். எய்திட-வந்து சேர. க்:சந்தி. காதல்-விருப்பத்தினுடைய. வழிப்படும்-வழியில் உண்டாகும். சீலம்-செளகீல்யத்தை; நல்ல பண்புகளை: .ஒருமை பன்மை மயக்கம். மிக்கார்-மிகுதியாகப் பெற்றவர் களாகிய சிவாசாரியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். திருக்காப்பு-தி ரு க் கோ யி லி ன் வாசற்கதவைப் பூட்டி