பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 341

அரத்துறை-திருநெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். ஆதியார்-எல்லாத் தேவர் களுக்கும் முதல் தேவராகிய ஆரத்துறைநாதர். தந்த " வழங்கிய, பேரருள்-பெருமையைப் பெற்றுத் திகழும் திருவருளால் கிடைத்த முத்துப் பல்லக்கு, முத்துக் குடை, பலவகையாக உள்ள சின்னங்கள் ஆகியவற்றை: ஆகுபெயர். தாங்குவீர்-தேவரீர் தாங்கியருள்வீராக. என்றனர். என்று கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். பின்பு உள்ள 212-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்கள் அவ்வாறு தங்களுக்கும் பரமேசுவரராகிய ஆரத் துறைநாதர் திருவாய் மலர்ந்தருளிச் செய்த வார்த்தைகள் ஒன்றையும் அந்த இடத்தில் விட்டுவிடாமல் கூறிவிட்டு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு முன்னால் நின்று கொண்டு அந்த நாயனாரை வாழ்த்தி வணங்க : "இவ்வாறு அடியேனுக்கு முத்துப் பல்லக்கு முத்துக் குடை. பலவகையாக உள்ள சின்னங்கள் ஆகியவை கிடைக்க நேர்ந்தது சிதம்பரத்தில் உள்ள திருக்கோயிலில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவராகிய நடராஜப் பெருமானார் வழங்கிய திருவருளினால்' என அந்த தாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு அந்த நடராஜப் பெருமானாரைப் பணிந்தார். பாடல் வருமாறு:

" என்று தங்களுக் கீசர் அருள்செய்த

தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன் கின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது மன்று எாாருள் என்று வணங்கினார்.' என்று-திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்கள் அவ்வாறு என தங்களுக்கு சசர்-தங்களுக்குப் பரமேசுவரராகிய அரத்துறை நாதர். அருள் செய்ததுதிருவாய் மலர்ந்தருளிச் செய்த வார்த்தைகள்: ஒருமை கான்மை மயக் கம். ஒன்றும்-ஒன்றையும். அங்கு-அந்த