பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

梦 p

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 6-ஆவதாக உள்ள வம்பறாவளி வண்டுச் சருக்கத்தில் முதலில் உள்ளது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம். அதில் வரும் முதற் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

வைதிக சமய வழி தழைப்பை அடைந்து ஓங்கி நிற்கவும், மிக்க சிறப்பைப் பெற்ற சைவ சமயத்துறை விளக்கத்தைப் பெறவும் உயிர்கிளினுடைய பரம்பரை விளங்கவும் தம் முடைய தூயதாகிய திருவாய் மலர்ந்து அமுதருளிய குளிர்சி சியைப் பெற்ற பயிர்களின் வளம் நிரம்பிய வயல்களைக் கொண்ட புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் புரிந்தருளிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடிகளாகிய சொந்ாமரை மலர்களை அ டி ேய ம் அடியேமுடைய தலையின் மேல் வைத்துக் கொண்டு கும் பிட்டுவிட்டு அந்த நாயனாரை வணங்கிவிட்டு அந்த நாயனார் புரிந்தருளிய திருத்தொண்டுகளை வாழ்த்தி விட்டு இனிமேல் பாடத் தொடங்குவோம். பாடல் வருமாறு:

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு

பரவுவாம்.'

இது சேக்கிழார் கூற்று. வேதநெறி-வைதிக சமயவழி: தழைத்து-தழைப்பை அடைந்து. ஓங்க-ஒங்கி நிற்கவும், மிகு