பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பெரிய புராண விளக்கம்-10

இருக்கும் இருக்கு வேதம்,யஜுர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாகவே அத்தியயனம் செய்து ஒதும் இனிய நாதம் வளர்ந்து நிற்கும் கமுக மரங்கள் வளர்ந்திருக்கும் செழிப்பைப் பெற்று விளங் கும் பூம்பொழில் வெளியைச் சுற்றியிருக்க தனக்கு வேறு எந்த நகரமும் ஒப்பு இல்லாத நகரமாகிய அந்தச் சீகாழி சிறந்து ஓங்கி விளங்குவதால் கலியுகத்தின் இறுதி நாளில் அல்லாமலே எந்தக் காலத்திலும் சமுத்திரத்தில் அமிழாமல் அதன் மேல் மிதப்பது என்று கூறும் பெருமையைப் பொருந்

தியிருப்பது. பாடல் வருமாறு:

" அப்பதிதான் அந்தணர்தம் கிடைகள்அரு

மறைமுறையே செப்பும்ஒலி வளர்பூகச் செழும்சோலை புறம்சூழ ஒப்பில்நகர் ஒங்குதலால் உகக்கடைகாள் அன்றியே எப்பொழுதும் கடல்மேலே மிதப்பதென . இசைந்துளதால்."

அப்பதிதான்-அந்தச் சிவத்தலமாகிய சீகாழி. தான்: அசை நிலை. அந்தணர்தம்-வேதியர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. கிடைகள்-வேத பாடசாலை களில், அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக இருக்கும்.மறை-இருக்கு வேதம்,யஜூர் வேதம்,சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும், ஒருமை பன்மை மயக்கம். முறையே-முறையாகவே. செப்பும்.அத்திய யணம் செய்யும் பிரமசாரிகள் அந்த வேதங்களை ஒதும ஒலிஇனிய நாதம். வளர்பூக-கமுக மரங்கள் வளர்ந்து நிற்கும். பூக ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி.செழும்-செழிப்பைப் பெற்று விளங்கும். சோலை-பூம்பொழில். புறம்-சீகாழியின் வெளியில் உள்ள இடத்தை. சூழ-சுற்றியிருக்க ஒப்பு-தனக்கு வேறு எந்த நகரமும் சமானம். இல் இல்லாத இடைக்குறை. நகர்-நகரமாகிய அந்தச் சீகாழி. ஓங்குதலால்-ஓங்கி விளங்கு வதால், உகக்கடைநாள்-இந்தக் கலியுகத்தின் இறுதிநாளில். அன்றியே-அல்லாமலே எப்பொழுதும்-எந்தக் காலத்திலும்.