பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெரிய புராண விளக்கம்-10

டைய ஆலயத்தில் இருக்கும் கட்டு மலையின் மேல் விளங் கும் தோணியில். வீற்றிருந்தார். அமர்ந்திருந்தவராகிய தோணியப்பர். அருள் நோக்கால்-வழங்கிய திருவருட் பார் வையினால், முன்-முன்னால் அவரிடம் இருந்த நிலைமைநிலைமையின் படி. த்: சந்தி, திருத்தொண்டு-திருத்தொண்டு களை ஒருமை பன்மை மயக்கம்.முன்னி-எண்ணி. அவர்க்குஅந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு. அருள் புரிவான்-தம்முடைய திருவருளை வழங்கும் பொருட்டு. பொன்-தங்கம் தோன்றும். மலை-இமயமலை அரசனுடைய புதல்வியும் திணை மயக்கம்; ஆகு பெயர். வல்லியும்-பூங் கொடியைப் போன்றவளும் ஆகிய பார்வதி தேவியும்; உவம ஆகு பெயர். தாமும்’ என்றது சிவபெருமானாரை. பொருபோர் புரியும், விடைமேல்-இடப வாகனத்தின் மேல். எழுந் தருளி-எழுந்தருளி வந்து. ச்: சந்தி சென்னி-தம்முடைய தலை யின் மேல். இளம்பிறை.இளைய பிறைச்சந்திரன். திகழவிளங்க. ச்: சந்தி. செழும்-செழுமையைப் பெற்ற, செழுமைநீர் நிரம்பியிருக்கும் தன்மை. பொய்கை-பொய்கையாகிய பிரமதீர்த்தத்தினுடைய. பொய்கை-மனிதர் ஆக்காத நீர் நிலை. மருங்கு-பக்கத்தை. அணைந்தார்-அந்த நாயனார் அடைந்தார்.

o இன்டுத்து உள்ள 65-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 愈、AT - ॐ ‘அழகிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களாகிய சாத் திரத்தை முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய மறையவராகிய சிவபாத இருதயருக்கும் அவருடைய தர்ம பத்தினியாராகிய பகவதியாருக்கும் முன்பு தாம் வழங்கி அருளிய பெருகி எழும் வரத்தை எண்ணியோ, அல்லது தம் முடைய பெருமையைப் பெற்று விளங்கும் வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை விரும்பி வணங்கும் ஒருமைப் பாட்டைப் பெற்ற வழியில் உண்டாகும் சிவஞானத்தை வழங்கியருளுவதற்காகத் தம்மோடு வீற்.