உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெரிய புராண விளக்கம்-2

அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப் பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள்

- மாவலிதன் மங்களவேள் வியிற்பண்டு வாமனனாய் மண் இரந்த செங்கணவன் வழிபட்ட திருமாணி குழிஅணைந்தார்'

அங்கணரை-அழகிய கண்களைப் பெற்றவராகிய வீரட் டானேசுவரருடைய கண்:ஒருமை பன்மை மயக்கம். கணரை: இடைக்குறை. அங்கணரை:உருபு மயக்கம். அடிதிருவடிகள்ை: ஒருமை பன்மை மயக்கம். போற்றி-சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்த்தி வணங்கிவிட்டு. அங்கு-அந்தத் திருவதிகை வீரட்டானத்தை. அகன்று-விட்டு அப்பால், எழுந்தருளி. மற்று: அசைநிலை. அந்தப் பொங்கு-அந்த நீர் பொங்கி ஒடும். நதி-கெடில நதியினுடைய. தென் கரை-தெற்குக் கரையின் வழியாக. போய்-எழுந்தருளி. ப்:சந்தி, போர்-யுத்தம் ச்ெய்யும். வலி-வலிமையைக் கொண்ட த்:சந்தி. தோள்தோள்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மாவலிதன்-மகாபலிச் சக்ரவர்த்தியினு டைய தன்: அசைநிலை. மங்கள-மங்களமான. வேள்வி யில்-யாகத்தில். பண்டு-பழங்காலத்தில். வாமனனாய்வாமனாவதாரத்தை எடுத்தவனாய். மண்-மூன்று அடிகள் நிலத்தை. இரந்த-அந்தச் சக்கரவர்த்தியிடம் யாசகம் செய்த, செங்கணவன்-செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த கண்களைப் பெற்றவனாகிய திருமால். கண்:ஒருமை பன்மை மயக்கம். கணவன்.இடைக்குறை. வழிபட்டவணங்கி நலம்பெற்றதாகிய திருமாணிகுழி-திருமாணிகுழி என்னும் சிவத்தலத்தை. அணைந்தார்.அந்த நாயனார் அடைந்தார்.

திருமாணிகுழி: இது நடுநாட்டில் பெண்ணையாற்றின் கரையில் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருப்பவர் மாணிக்க வரதேசுவரர். அம்பிகை மாணிக்கவல்லியம்மை.