உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பெரிய புராண விளக்கம்-2

பன்மை மயக்கம். மதுரகம்-இருப்பை மரம். பொதுளும்தழைகள் அடர்ந்திருக்கும். வஞ்சி-வஞ்சி மரம். பல-ஆகிய பல மரங்களும். எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். நெருங்கி-நெருக்கமாக வளர்ந்து, மேகமேகங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். சாலம்கூட்டம். மலி-மிகுதியாக உள்ள. சோலைகளாகி-பூம் பொழில்களே ஆகி. மீது-அந்தச் சோலைகளில் வளர்ந்து நிற்கும் மரங்களின் கிளைகளின்மேல். கோகிலம்-குயில்கள்; ஒருமை பன்மை மயக்கம். மிடைந்து-நெருங்கி அமர்ந்து கொண்டு. மிழற்ற-கூவ. ப்:சந்தி. போக பூமியினும் போக பூமியாகிய சுவர்க்கலோகத்தைக் காட்டிலும், மிக்கு மிகுதியான சிறப்பைப் பெற்று. விளங்கும்-திகழும். பூம்மலர்கள் மலர்ந்த மரங்கள் வளரும்; ஒருமை பன்மை மயக்கம். புறம்பணை-வெளி இடத்தை. கடந்து-தாண்டி. புகுந்தார்-சுந்தரமூர்த்தி நாயனார் சிதம்பரத்துக்குள் நுழைந்தார்.

பிறகு உள்ள 94-ஆம்பர்டலின் கருத்து வருமாறு:

வன்னி மரம், கொன்றை மரம், சுரபுன்னை மரம், சண் பக மரம், சந்தன மரம், மலர்கள் மலர்ந்த புரச மரத்தோடு செருந்தி மரம்,மந்தார மரம், கோங்கிலவ மரம், குரா மரம், நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்த புன்னை மரம், கற்பைக் குறிக்கும் முல்லைக் கொடி, பாதிரி மரம், வில்வ மரம், ஒங்கி வளர்ந்திருக்கும் சிறு சண்பக மரம், மருக்கொழுந்துச் செடி, ஊசி முல்லைக்கொடி, மல்லிகைக்கொடி, நெருங்கி வளர்ந் திருக்கும் நந்தியாவட்டைச் செடி, அரளிச் Θεις. ஆகியவை செறிந்து வளர்ந்திருக்கும் துாய்மையைப் பெற்ற நந்தன வனங்கள்ை வணங்கிவிட்டு நறுமணம் கமழும் மலர் மாலையை அணிந்த சுந்தரமூர்த்தி எழுந்தருளினான்.” பாடல் வருமாறு: