உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 - பெரிய புராண விளக்கம்-2 .

திருவாரூர்: நாகப்பட்டினத்துக்கு மேற்கில் 14-மைல் துரத்தில் இந்தத் தலம் இருக்கிறது. நிறை செல்வத் திருவாரூர்.' என்று இந்தத் தலம் சிறப்பிக்கப் பெறும். இந்தத் தலத்தில் விளங்கும் திருக்கோயிலுக்குத் திரு மூலட் டானம் என்பது பெயர்; இதைப் பூங்கோயில் என்றும் கூறுவார்கள். தேங்காவின் ஊறும் திருவாரூர்த் தொன் னகரித், பூங்கோயிலுள் மகிழ்ந்து போகா திருந்தாரே.” என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. இது திருமகள் வழிபட்ட திருத்தலம்; பிறக்க முத்தி அளிக்கும் சிவத்தலம். மநுநீதி கண்ட சோழ மன்னர் அரசாட்சி புரிந்த தலைநகரம். சிதம்பரம் திருக்கோயிவில் புதைக்கப் பட்டிருந்த தேவாரத் திருப்பதிகங்களைக் கண்டெடுத்து அவற்றை ஏழு திருமுறை களாக அமைத்து, எட்டாம் திருமுறையாகத் திருவாசகத் தையும் திருக்கோவையாரையும் வைத்து, ஒன்பதாம் திரு. முறையாக, திருமாளிகைத் தே வர் திருவிசைப்பா, சேந்தனார் திருவிசைப்பா, கருவூர்த் தேவர் திருவிசைப்பா, பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா, கண்டராதித்தர். திருவிசைப்பா, வேணாட்டடிகள் திருவிசைப்பா, திருவாலி அமுதனார் திருவிசைப்பா, புருடோத்தம நம்பி திரு. விசைப்பா, சேதிராயர் திருவிசைப்பா, சேந்தனார் திருப் பல்லாண்டு என்பவற்றைச் சேர்த்து வைத்து, பத்தாம். திருமுறையாகத் திருமூல நாயனார் பாடியருளிய திரு மந்திரத்தை அமைத்து, பதினோராம் திருமுறையாக, திருவர்லலாயுடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம், காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகம், மூத்து திருப்பதிகம் இரு விரட்டை மணி மாலை, அற்புதத் திரு அந்தாதி, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடியருளிய rேத்திரத் திருவெண்பா, சேரமான், பெருமாள் நாயனார் அருளிச் செய்த பொன் வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக் கைலாய ஞான உலா, நக்கீரதேவ நாயனார் பாடியருளிய கயிலை 1ாதி காளத்தி பாதி அந்தாதி, திரு ஈங்கோய் மலை எழுபது,