உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 343

என்று சாலவும் ஆற்றலர், என்னுயிர் கின்ற தெங் கென கித்திலப் பூண்முலை. மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான் சென்று தேவா சிரயனைச் சேர்ந்தபின்,

இந்தப் பாடல் குளகம். என்று-என்று இவ்வாறு கந்தர மூர்த்தி நாயனார் எண்ணி. சாலவும்-மிகவும். ஆற்றலர்தம்முடைய துயரத்தை ஆற்ற முடியாதவராகி; முற் றெச்சம். என்-என்னுடைய. உயிர்-உயிரைப் போன்ற பரவை உவம ஆகுபெயர். இங்கு-எந்த இடத்தில், நின்றதுநின்று கொண்டிருக்கிறாள்: திணை மயக்கம். என-என்று கருதி, இடைக்குறை, நித்தில-முத்துக்களைக் கோத்த: ஒருமை பன்மை மயக்கம், ப், சந்தி. பூண்-அணிகலனாகிய மாலையை அணிந்திருக்கும். முலை-கொங்கைகளையும்: ஒருமை பன்மை மயக்கம். மன்றல்-நறுமணம் கமழும். வார். நீளமான, குழல்-கூந்தலையும். வஞ்சியை-வஞ்சிக் கொடி யைப் போன்ற தோற்றப் பொலிவையும் இடையையும் பெற்ற பரவையை. த், சந்தி. தேடுவான்-தேடும் பொருட்டு. சென்று-போய். தேவாசிரயனை-திருவாரூர்ப் பூங்கோயிலில் உள்ள தேவாசிரயன் என்னும் காவணத்தை. ச்: சந்தி. சேர்ந்த-அடைந்த பின்-பிறகு.

வஞ்சி: வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க..' என்வஞ்சி மருங்குல். (பெருங்கதை 2. 9: 168, 3. 1: 157) என்று கொங்கு வேளிரும், வஞ்சியங் கொம்பனாள்.', 'வஞ்சி நுண்ணிடை. (சீவக சிந்தாமணி, 358, 2384), வஞ்சியிடை யீர்.” (சிலப்பதிகாரம், 29), வஞ்சி மகளிர்கொல். என்று இளங்கோவடிகளும், வஞ்சிபோல் மருங்குல்." (நகரப் படலம், 10), 'வஞ்சிபோல் இடையாள்.' (அகலிகைப் படலம், 85), வஞ்சிபோல் மருங்குலார்." (பூக்கொய் படலம், 7), வஞ்சிபோலி' (மந்தரை சூழ்ச்சிப் படலம், 68), "வஞ்சி நாண.', 'வஞ்சியாள் வதனம் என்னும் தாமரை...' (கங்கைப் படலம், 20, 51), 'வஞ்சியென நஞ்ச