பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 10%'

மயக்கம். வனம் எங்கும்-காடுகள் எல்லாவற்றிலும்;ஒருமை பன்மை மயக்கம். வரம்பு-எல்லை. இல்-இல்லாத கடைக் குறை. காலம்-காலமாக கை-தன்னுடைய கையில் பிடித்த. வண்ண-அழகிய நிறத்தைக் கொண்ட, ச் சந்தி சிலை. வில்லால். வேட்டையாடி-பல விலங்குகளை வேட்டை. யாடிக் கொன்று. த், சந்தி. தெவ்வர்-பகைவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். க ை-கூட்டமாகிய, நிரைகள். பசுமாடுகளின் வரிசைகள். பல-பலவற்ற்ை. கவர்ந்துகொள்ளையடித்துக் கொண்டு வந்து. கானம்-காட்டை, காத்து-பாதுகாத்து. மெய்-தன்னுடைய உடம்பினுடைய. வண்ணம்-இயல்பு. தளர்-தளர்ச்சியை அடையும். மூப்பின்முத்மையாகிய, பருவம்-கிழப் பருவத்தை. எய்தி-அடைந்து. வில்உழவின்-வில்லையே ஏராகக் கொண்டு போரா இய உழவைச் செய்யும்; 'வில்லே ருழவர் பகைகொள்ளும்' என்று திருக்குறளில் வருவதைக் காண்க. பெரு-பெரிய, முயற்சி-முயற்சியில். மெலிவான்-மெலிவை அடைபவன். ஆனான்.ஆயினான்.

அடுத்து வரும் 44-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்த இடத்தில் உள்ள விசாலமான மலைப்பக்கங். களிலும், தினை க் கொல்லைகள் எல்லாவற்றிலும் வலிமை யைப் பெற்ற காட்டுப்பன்றி, புலி, கரடி, கடமைமான், காட்டுப் பசுமாடு, கொடுமையான கண்களையுடைய மரை என்னும் மானும், கலைமானோடு மான் முதலாக இருக்கிற, விலங்குகள் மிகுதியாக நெருங்கி வந்து மேலும் மேலும் வரும். காலத்தில், 'ஒவ்வொரு மாதமும் முறையாகச் செய்யும் வேட்டையாகிய தொழில் சரியாக நடவாமல் தாமதம் ஆயிற்று' என்று விற்களைப் பிடித்த வேடர்கள் எல்லோரும் கூட்டமாகக் கூடிப் போய்த் தங்கள் சாதியினுடைய முதன்மையைப் பெற்ற தலைவனாகியிருக்கிற குளிர்ச்சியைக் கொண்ட மலர் மாலையை அணிந்த நாகனிடத்தை அடைந்து கூறினார்கள். பாடல் வருமாறு: