பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 197

அது: பகுதிப்பொருள் விகுதி. நிரப்புமாறு-நிரப்பும்வண்ணம்; நிறைவு செய்வதற்காக. மனம்-தம்முடைய திருவுள்ளத்தில். கொண்ட குறிப்பினால் கொண்ட குறித்த எண்ணத்தோடு ; உருபு மயக்கம். மறாமை-மறுக்காமல் கொண்டு-அந்தத் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டு. முந்தை-முதலில். அவன்-அந்த நாகனுடைய கழல்-வீரக்கழலைப் பூண்ட திருவடிகளை ஆகுபெயர். வணங்கி - பணிந்துவிட்டு. முறைமை-முறைமையினால். தந்த-அவன் கொடுத்த. முதல்முதன்மையான. சுரிகை-உடைவாளையும். உடைதோலும்தோலாடையையும். வாங்கிக்கொண்டு - த ம் மு ைட ய கைகளில் வ | ங் கி க் .ெ க ா ண் டு. சிந்தை-தம்முடைய திருவுள்ளத்தில். பரம்-அந்தப் பொறுப்பை. கொள-ஏற்றுக் கொள்ளும்பொருட்டு : இடைக்குறை. நின்ற - நின்று கொண்டிருந்த, திண்ணனார்க்கு-தன்னுடைய புதல்வராகிய திண்ணனாருக்கு. த் சந்தி. திரு-செல்வத்தைப் பெற்ற. த்: சந்தி. தாதை-தந்தையாகிய அந்த நாகன். முகம் தன்னுடைய வதனம். மலர்ந்து-மலர்ச்சியை அடைந்து.

செப்புகின்றான்.கூறுகிறவன் ஆனான்.

பின்பு வரும் 55-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு :

நம்முடைய சாதியில் பிறந்த வேடர்களினுடைய உறவினர்களை யான் துணைவர்களாகக் கொண்டு இந்தத் தலைமைப் பதவியைத் தாங்கி அதற்குப் பின்னால் நன்மை களையே புரிந்து, பகைவர்கள் போரிடும் போர்க்களத்தில் வேறு இடங்களில் வாழ்பவர்களிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டு வந்தவற்றிற்குக் கருவியாக இருந்த உறுதியான வில்லினுடைய வளப்டம் நீங்காத சிறப்போடு நீ வாழ்வாயாக கொடுமையான காடுகளாகிய இடங்களில் புரியும் வேட்டைகளும் நினக்கு வாய்ப்பாக அமையும்; வேகத்தோடு நீ தாமதம் செய்யாமல் வேட்டை யாடுவதற்காக இந்த வலிமையைக் கொண்ட கொடிய விற்களை ஏந்திய வேடர்களோடும் எழுவாயாக!' என்று