பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெரிய புராண விளக்கம்-4

மங்கலர்ேச் சுனைபடிந்து மனையின் வைகி

வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப் பொங்குசிலை அடல்வேட்டைக் கோலம் கொள்ளப் புனைதொழிற்கை வினைஞரொடும் பொலிந்து

புக்கார்."

செம்-சிவந்த கண்-கண்களையும் ; ஒருமை பன்மை மயக்கம். வய-வலிமையையும். க் சந்தி. கோள்-கொலை புரியும் ஆற்றலையும் பெற்ற, அரியேறு-ஆண்சிங்கத்தை. அன்ன-போன்ற, திண்மை-உறுதியைக் கொண்ட த் சந்தி. திண்ணனார்-நாகனுடைய புதல்வராகிய திண்ணனார். செய்-தான் முற்பிறவியில் புரிந்த, தவத்தின்-தவத்தின் பயனாக ஆகுபெயர். பெருமை பெற்ற - பெருமையைப் பெற்ற, வெம்-கொடுமையாக இருக்கும்.கண்-கண்களையும்; ஒருமை பன்மை மயக்கம். விறல்-பேராற்றலையும் பெற்று விளங்கும். தாதை-தம்முடைய தந்தையாகிய நாகனுடைய. கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை ஆகுபெயர். வனங்கி-பணிந்துவிட்டு. நின்று அவனுக்கு முன்னால் நின்று கொண்டு. வி1ை.கொண்டு-அவனிடம் விடையைப் பெற்றுக்கொண்டு.புறம்-தம்முடைய திருமாளிகைக்கு வெளி யில். போந்து-எழுந்தருளி, வேடரோடும் வேடர்களுடனும்: ஒருமை பன்மை மயக்கம். மங்கலநீர்-மங்கலமாகிய புனல் நிரம்பியுள்ள ச் சந்தி. சுனை சுனையில். படிந்து-முழுகி விட்டு வந்து. மனையின்-தம்முடைய திருமாளிகையில். வைகி-தங்கியிருந்து வைகு-தங்கிய இருளின் புலர் காலைஇரவு நேரம் போய் விடியும் வேளையில். இன்: வேண்டா வழி வந்த சாரியை. வரி-வரிந்து கட்டப்பெற்ற. வில்விற்களைச் சேமித்து வைத்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். சாலை-ஆயுத சாலைக்குள். ப் சந்தி. பொங்குவீரம் பொங்கி எழும். சிலை-வில்லால். அடல்-ஆற்றலைக் காட்டும். வேட்டை-விலங்குகளை வேட்டையாடுவதற்கு ஏற்ற, க் சந்தி. கோலம்-திருக்கோலத்தை கொள்ளமேறுகொள்வதற்காக. ப் சந்தி. புனை - அலங்காரம்