பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 1.4%

மோதும் விசாலமாகிய அலைகளைக் கொண்ட சமுத் திரத்தினுடைய பரந்த இடத்தில் சென்று சங்கமமாகும் பெரிய கருமையான அலைகள் நீளமாக அடிக்கும் யமுனா நதியாகிய கன்னிகையை ஒத்து விளங்கியது.' பாடல் வருமாறு:

நெருங்குபைங் தருக்குலங்கள் நீடு காடு கூடகேர் வரும்கரும் சிலைத்தடக்கை மான வேடர்

- சேனைதான். பொருந்தடங் திரைகடற் பரப்பிடைப் புகும்பெரும் கருங்தரங்க நீள்புனற் களிந்திகன்னி ஒத்த தே." நெருங்கு-நெருங்கி வளர்ந்த பைம்.பசுமையான தருமரங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. குலங்கள்-சாதிகள். நீடு-உயரமாக வளர்ந்திருக்கும். காடுகாட்டை. கூட-அடைவதற்காக. நேர்-நேரில். வரும்கரும். வரும் கருமையான. சிலை-விற்களை ஏந்திய, ஒருமை, பன்மை மயக்கம். த், சந்தி. தட-விசாலமான, க்: சந்தி. கை - கைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். மான-பெருமையையும் கொண்ட வேடர் - வேடர்கள் அடங்கிய, சேனை-படை. தான்: அசை நிலை. பொரும்கரையை மோதும். தடம்-விசாலமான, திரை-அலைகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கடல்-சமுத் திரத்தினுடைய. பரப்பிடை-பரந்த இடத்தில். ப்: சந்தி. புகும்-சென்று சங்கமம் ஆகும். பெரும்-பெருமையைப் பெற்ற கரும்-நீல நிறத்தைப் பெற்ற, தரங்க-அலைகள் வீசும்; ஒருமை பன்மை மயக்கம். நீள்-நீளமான, புனல்-நீர் ஒடும். களிந்தி கன்னி-யமுனை ஆறாகிய கன்னிகையை. ஒத்தது-ஒத்து விளங்கியது. ஏ. ஈற்றசை நிலை. வேடர்கள் அடங்கிய படை யமுனை ஆற்றில் ஒடும் நீரைப்போன்ற உடையதாக இருந்தது. - -

பின்பு வரும் 74-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தெற்குத் திக்கில் உள்ள மலையோடு மரங்கள் நிறத்தை நெருங்கி வளர்ந்து நிற்கும் காட்டில் வாழும் மான்'