பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகண்ணப்ப நாயனார் புராணம் 155

டெருமை, யானை, கொடுமையான புலிகளினுடைய கூட்டங்கள், காட்டுப்பசு ஆகிய விலங்குகள் பலவாக அச்சத்தை அடைந்து எழுந்து பாய முன்னால் படையாக உள்ள வேடர்கள் மேலே எதிர்த்துச் சென்று கோபத்தோடு சீறிக்கொண்டு அம்புகளால் அந்த விலங்குகளைக் கொன் தார்கள். பாடல் வருமாறு:

"ஏனமோடு மானினங்கள் எண்குதிண் கலைக்குலம்

காணமேதி யானைவெம் புலிக்கணங்கள்

கான்மரை ஆனமா அநேகமா வெருண்டெழுந்து பாயமுன் சேனைவேடர் மேலடர்ந்து சீறிஅம்பில்

நூறினார் .' ஏனமோடு - காட்டுப் பன்றியோடு. மான்-மான்களி னுடைய ஒருமை பன்மை மயக்கம். இனங்கள்-கூட்டமும். எண்கு-கரடியும். திண்-உறுதியான. கலைக்குலம்-கலை மான்களினுடைய கூட்டமும். கலை: ஒருமை பன்மை மயக்கம். காணமேதி - காட்டெருமையும். யானையானையும், வெம்-கொடுமையாகிய, புலி-புலிகளினுடைய: ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி, கணங்கள்-கூட்டங் களும். கான்மரை-காட்டுப் பசுமாடும். ஆன - இவ்வாறு உளவான மா-விலங்குகள்; ஒருமை பன்மை மயக்கம். அநேகமா-பலவாக, வெருண்டு-அச்சத்தை அடைந்து. எழுந்துபாய - எழுந்து கொண்டு தாவிப் பாய. முன்முன்னால். சேனை-படையாக உள்ள. வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மேல்-மேலே. அடர்ந்து-எதிர்த்துச் சென்று. சீறி - கோபத்தோடு சீறிக்கொண்டு, அம்பில்அம்புகளால்; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். நூறினார்-கொன்றார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 79-ஆம் செய்யுளின் கருத்து வருவன:

அவ்வாறு வேடர்கள் கொன்றபோது கலைமான்கள் தங்களுடைய கால்கள் வெட்டப்பட்டவையாகவும்; இடுப்