பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l&4 பெரிய புராண விளக்கம்-4

முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி என்புகெக் குருகி உள்ளத் தெழுபெரு வேட்கை

- ' . யோடும் .'

இந்தப் பாடல் குளகம். முன்பு-முன்பிறவியில். செய்புரிந்த, தவத்தின் - தவத்தினுடைய பயனினுடைய: ஆகுபெயர். ஈட்டம்-தொகுதி. முடிவு-முடிவே. இலாஇல்லாத இடைக்குறை. இன்பமான - பேரின்பமான. அன்பினை-பக்தியை. எடுத்துக்காட்ட-எடுத்துக் காண்பிக்க. அளவு இலா-அளவு இல்லாத. இலா: இடைக்குறை. ஆர்வம்பேராவல். பொங்கி-பொங்கி எழுந்து. மன்- நிலைபெற்று விளங்கும். பெரும்-பெரிய காதல்-விருப்பம். கூர-மிகுதியாக உண்டாக, வள்ளலார்-வள்ளலாராகிய திண்ணனார். மலையை-காளத்தி மலையை நோக்கி-பார்த்து. என்புதம்முடைய எலும்புகள்: ஒருமை பன்மை மயக்கம். நெக்கு - நெகிழ்ந்து. உருகி - உருக்கத்தை அடைந்து. உள்ளத்து-தம்முடைய திருவுள்ளத்தில். எழு-எழுந்த. பெருபெரிய வேட்கையோடும்-விருப்பத்தோடும்.

என்பு நெக்குருகுதல்: ‘'என்பெலாம். நெக்கிராப் பகல் ஏத்தி நின்று." என்று திருநாவுக்கரசு நாயனாரும், என் புதைந் துருகி நெக்கு நெக்கேங்கி.", என்புருகிப் பாடுகின் றிலை.', 'என்பெலாம் உருக நோக்கி.', 'என்பெலாம். உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே.”, 'ஈர்த்தீர்த்தென் என் புருக்கி.', 'என்புள் உருக்கி இருவினையை ஈடழித்து., 'என்பே உருக நின்னருள் அளித்து. என்று மாணிக்க வாசகரும், 'என்பெலாம் உருகும் அன்பர்.’’ என்று கருவூர்த் தேவரும், என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்.' என்று திருமூலரும், 'அன்பின் அ டை ந் த வர் க் கணி ைம யு ம் நாடொறும், என்பினை உருக்கும் இயற்கைய.” என்று பட்டினத்துப் பிள்ளையாரும், என்பும் தழுவிய ஊனும் நெக அகமே எழுந்த அன்பின் வழிவந்த ஆரமிர்தே." என்று.