பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பெரிய புராண விளக்கம்

தேவரீர் அமுது செய்வதற்காக. நல்ல-நல்லதும்; வின்ை யாலண்ையும் பெயர். மெல்-மென்மையானதும் ஆகிய; வினையாலணையும் பெயர். இறைச்சி - மாமிசத்தை, நானே-அடியேனே. கோது-ஒரு குற்றமும். அற-இல்லாதபடி, த்: சந்தி. தெரிந்து-ஆராய்ந்து கொண்டு-அதைக் கொண்டு. இங்கு-இந்த இடத்திற்கு. வருவேன்-வந்து சேருவேன். என்பார்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்வார்.

அடுத்து உள்ள 113-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

யார் தேவரீருக்கு உறவினராகத் தேவரீர் இந்தக் காளத்தி மலையில் இருப்பது என்று எண்ணி அடியேன் தேவரிரைப் பிரிய முடியாதவனாக இருக்கிறேன்; தேவரீர் பசித்து இருக்க இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கவும் முடியாதவன் அடியேன்” என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டுக் கண்களிலிருந்து சொரியும் நீர் வழியச் சென்று திரும்பி வரத் தீர்மானம் செய்தவராகி அந்தத் திண்ணனார் தம்முடைய நீளமான வில்லைத் தம்முடைய கையில் எடுத்துக் கொண்டு தம்முடைய செந்தாமரை மலர் களைப் போன்ற திருக்கரங்களால் காளத்தீசுவரரைக் கும்பிட்டுப் பிறகு தரையில் விழுந்து பணிந்து விட்டுச் சென்றார். பாடல் வருமாறு: - ஆர்தமராக நீரிங் கிருப்பதென் றகல மாட்டேன்;

நீர்பசித் திருக்க இங்கு கிற்கவும் கில்லேன். என்று

சோர்தரு கண்ணிர் வாரப் போய்வரத் துணிந்தா ராகி

வார்சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால்

- • ‘ தொழுது போந்தார் . .

ஆர்-யார். தமராக தேவரீருக்கு உறவினராக. நீர்தேவரீர். இங்கு-இந்தக் காளத்தி மலையில். இருப்பதுதனியாக இருப்பது. என்று-என எண்ணி. அகலமாட்டேன்பிரிய முடியாதவனாக இருக்கிறேன். நீர்-தேவரீர். பசித் திருக்க-பசியோடு இருக்க. இங்கு நிற்கவும்-இந்த இடத்தில் நிற்கவும். கில்லேன் - முடியாதவனாகி. என்று-எனத்