பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பெரிய புராண விளக்கம்-4

அன்ன-அத்தகைய. இம்மொழிகள்-இந்த வார்த் தைகளை. சொல்லி-திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. அமுது செய்வித்த-காளஹஸ்தீசுவரருக்குத் திருவ முதைப் படைத்து உண்ணச் செய்த வேடர் - வேடர் களினுடைய; ஒருமை பன்மை மயக்கம். மன்னனார்அரசராகிய திண்ணனார். திரு.அழகிய. க்: சந்தி. காளத்தி மலையினார்க்கு-காளஹஸ்தி மலையை உடையவராகிய குடு மித் தேவருக்கு. இனிய-இனிய சுவையைப் பெற்ற நல்-நல்ல. ஊன்-மாமிசத்தை. இன்னமும்-இதற்கு மேலும். வேண்டும்நாம் படைக்க வேண்டும், என்னும்-என எழு - திண்ண னாருடைய உள்ளத்தில் எழுந்த பெரும்-பெரிய காதல்விருப்பத்தை. கண்டு-பார்த்து. பல்-பல். நெடும்-நீளமாக இருக்கும். கரங்கள்-கிரணங்களை கூப்பி-சுருக்கிக்கொண்டு. ப்: சந்தி. பகலவன்-பகல் வேளையைச் செய்யும் சூரியன்: 'பகற் செய்யும் செஞ்ஞாயிறும்' என வருவதைக் காண்க, மலையில்-அத்தமன கிரியில். தாழ்ந்தான்-இறங்கி அத்த மனம் ஆனான்.

பின்பு உள்ள 127-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு செவ்வந்தி நேரமாகிய மாலை வேளை வந்தவுடன், 'இனி இராத்திரி வந்துவிடும்; கொடிய மிருகங்கள் இங்கே இருக்கின்றன” எனத் திண்ணனார் அச்சத்தை அடைந்து உண்மையில் வேறு எந்த வேலை யையும் மேற்கொள்ளாதவராகி, செவ்வையாகிய பக்தி ஒன்றையே தாங்கிக்கொண்டு தம்முடைய அழகிய கரத்தில் வில்லையும் எடுத்துக் கொண்டு மையைப் போன்ற கரிய மல்ை என்று கூறும்வண்ணம் ஐயராகிய காளஹஸ்தீசு வரருடைய பக்கத்திலிருந்து திண்ணனார் போகாமல் நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:

அவ்வழி அக்தி மாலை அனைதலும், இரவு சேரும், வெவ்விலங் குள' என்றஞ்சி மெய்ம்மையின் வேறு

. கொள்ளார்;