பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் • 215

  • கழைசொரி தரளக் குன்றிற் கதிர்கில வொருபால்

பொங்க முழையர வுமிழ்ந்த செய்ய மணிவெயில் ஒருபால்

மொய்ப்பத் தழைகதிர்ப் பரிதி யோடும் சந்திரன் தலைஉ வாவில் குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் - ஒக்கும் .'

கழை-மூங்கில்கள்; ஒருமை பன்மை மயக்கம். சொரிஉதிர்க்கும். தரள-முத்துக்கள்; ஒருமை பன்மை மயக்கம். . க்: சந்தி. குன்றில்-மலையைப் போலக் குவிந்த குவியலில்; உவம ஆகுபெயர். கதிர்-ஒளியை வீசும்; சந்திரனுடைய கிரணமாகிய' எனலும் ஆம். நிலவு-நிலா. ஒருபால்-ஒரு பக்கத்தில். பொங்க-பொங்கி எழ. முழை - குகைகளில் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். அரவு - பாம்புகள்:

ஒருமை பன்மை மயக்கம். உமிழ்ந்த தங்களுடைய வாய்களிலிருந்து உமிழ்ந்த செய்ய-சிவந்த. மணி-மாணிக் கங்கள்; ஒருமை பன்மை மயக்கம். வெயில் வீசும்

சூரியனுடைய வெயிலைப் போன்ற ஒளி, உவம ஆகுபெயர். ஒருபால்-ஒரு பக்கத்தில். மொய்ப்பு-மிகுதியாகத் தோன்ற. த்: சந்தி. தழை-தழைத்த. கதிர்-கிரணங்களை வீசும், ப்: சந்தி. பரிதியோடும்-சூரியனோடும். சந்திரன்-சந்திரனும். தலைஉவாவில்-அமாவாசையில். குழை-சங்கக் குழைகளை: ஒருமை பன்மை மயக்கம். அணி-அணிந்த. காதர்செவிகளைப் பெற்றவராகிய காளஹஸ்தீசுவரர் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். காது: ஒருமை பன்மை மயக்கம். வெற்பை-காளத்தி மலைக்கு வந்து. க் : சந்தி. கும்பிட-காளத்தி நாதரைக் கும்பிட்டு வணங்கு வதற்காக ச் சந்தி. சென்றால் ஒக்கும்-வந்தாற்போல இருக்கும். முத்துக்களின் ஒளி சந்திரனுடைய நிலவைப் போலவும், மாணிக்கங்களின் ஒளி சூரியனுடைய வெயிலைப் போலவும் இருத்தலால் அந்த இருவரும் காளத்தி நாதரைத் தரிசித்து வணங்குவதற்கு வந்ததைப்போல இருக்கும்.