பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயன்ார்புராணம் * 841.

வாய்-கூர்மை வாய்ந்த. அம்பால்-அம்புகளால்; ஒருமை. பன்மை மயக்கம். அழிப்பதுவும்-சிதைத்து உருண்டை களாக அமைப்பதையும். வகுப்பதுவும்-வகை வகையாகப் பிரித்து அமைப்பதையும். செய்து-புரிந்து. அவற்றின்அந்த விலங்குகளினுடைய. ஆய-இருப்பவை ஆகிய உறுப்புஅங்கங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். இறைச்சி. மாமிசங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லா வற்றையும்; இடைக்குறை. அரிந்து தம்முடைய உடை வாளால் அறுத்து. ஒரு கல்லையில்-ஒரு பெரிய தொன் னைக்குள். இட்டு-வைத்து. க், சந்தி. காய-அவற்றைச் சுடுவதற்காக. நெடும்-நீளமாக இருக்கும்.கோல்-ஓர் அம்பில். -கோத்து-கோத்து எடுத்து. க், சந்தி. கனலின்கண்-நெருப்பில், உற-நன்றாக க் சந்தி. காய்ச்சி-வாட்டி, த், சந்தி. துயபரிசுத்தமாகிய திருஅமுது - திருஅமுதை உணவை. அமைக்க-காளத்தி நாதருக்குப் படைப்பதற்காக, ச், சந்தி. சுவை-அந்த மாமிசங்களினுடைய சுவையை. காணல். உறுகின்றார்-திண்ணனார் பார்க்கலானார்; கால மயக்கம்.

பின்பு வரும் 147-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

கணக்கைக் கடந்த தேவர்களுக்குப் படைக்கும் உணவை மேற்கொண்டு உண்ணச் செய்யும் சிவந்த நிறத்தைப் பெற்ற நெருப்பின் வாயில் வைத்தது என்று: கூறுயாறு காளத்தி மல்ையில் எழுந்தருளியிருக்கும் தலைவ. ராகிய காளத்தி நாதருக்கு உவப்பாகும் இயல்பைத் தாம். சோதனை பண்ணிப் பார்த்து அமைப்பதற்காகத் திண்ண னார் தம்முடைய அழகிய வாயில் அந்த மாமிசங்களாகிய திருவமுதை வைத்துக் கொண்டார். பாடல் வருமாறு:

எண்ணிறந்த கடவுளருக் கிடும்.உணவு கொண்டுட்டும் வண்ணஎரி வாயின்கண் வைத்ததெனக் காளத்தி அண்ணலார்க் காம்பரிசு தாம்சோதித்தமைப்பதற்குத் திண்ணனார் திருவாயில் அமைத்தார்ஊன்

- திரு.அமுது .' 6 3س ونس. ساهم