பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 307.

ஐயராகிய அந்தக் காளத்தீசுவரர் சார்ந்து முன்னால் அந்தக் கரத்தைப் பிடிக்கும் சமயத்திலும் சிவஞானத்தையும் பெரு, மையையும் பெற்ற அந்தணராகிய சிவகோசரியார் பார்த் தார்; நான்கு முகங்களைப் பெற்ற பிரமதேவன் முதலாக இருக்கிற தேவர்கள் கற்பக மரத்தில் வளரும் மலர்களை வேதங்கள் முழக்கத்தைச் செய்ய மழையாகச் சொரிந் தார்கள். பாடல் வருமாறு: -

கானவர் பெருமா னார்தம் கண்ணிடங் தப்பும் போதும் ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும் ஞானமா முனிவர் கண்டார்; நான்முகன் முதலாய்

உள்ள

வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைகள் -

- ஆர்ப்ப .'

கானவர்-காட்டில் வாழும் வேடர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். பெருமானார்-பெருமகனாராகிய திண்ண னார். தம்-தம்முடைய. கண்-விழியை. இடந்து-பிடுங்கி. அப்பும்-காளத்தி நாதருடைய திருவிழியில் அப்பும். போதும்-சமயத்திலும். ஊன் - மாமிசமாகிய, அமுதுதிருவமுதை. உகந்த-திருவுள்ளம் உவந்து ஏற்றுக்கொண்ட. ஐயர்-ஐயராகிய அந்தக் காளத்தீசுவரர். உற்று-சார்ந்து. முன்-முன்னால். பிடிக்கும்-திண்ணனாருடைய அந்தக் கரத்தைப் பிடிக்கும். போதும்-சமயத்திலும். ஞான. சிவஞானத்தையும். மா-பெருமையையும் பெற்ற. முனிவர்அந்தணராகிய சிவகோசரியார். கண்டார்-பார்த்தார். நான்முகன்-நான்கு முகங்களைக் கொண்ட பிரமதேவன். முகம்: ஒருமை பன்மை மயக்கம். முதலாய்-முதலாகி. உள்ள-இருக்கின்ற. வானவர்-தேவலோகத்தில் வாழும். தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வளர்-கற்பக மரத்தில் வளரும். பூமலர்களை ஒருமை பன்மை மயக்கம், மாரிமழையைப் போல. மறைகள்-இருக்கு வேதம், யஜுர்வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்.

4-19 س- ,L(م)