பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் - 27

அடல்-கொலை செய்வதைப் பெற்ற முனை-போர்க் களத்தில். மறவர். வீரர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மடிந்தவர்-இறந்தவர்கள் ஆனார்கள்; ஒருமை பன்ம்ை மயக்கம். அவர் அவர்களுடைய, ஒருமை பன்மை பயக்கம். முகம்-முகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உயிர்உயிர்களை ஒருமை பன்மை மயக்கம். உள-பெற்றவை: இடைக்குறை. என்று-என எண்ணி. உறு-தங்களிடம் இருக்கும். படர்-பறப்பதற்குரிய, சிறை-சிறகுகள் ஒருமை பன்மை மயக்கம். சுலவு-அமைந்த. கரும்-கருமையான. கொடி.காக்கைகள்: ஒருமை பன்மை மயக்கம். படர்வனபரவிப் பறந்தன. சுழல்வன-சுழன்று கொண்டு இருந்தன. துன்றலில்-அந்தக் காக்கைகள் அவ்வாறு சேர்ந்ததனால். விடுசுடர்-ஒளியை வீசும். விழிகள்-கண்களில் உள்ள கரிய மணிகள். இரும்பு-இரும்பு வேலையை: ஆகுபெயர். செய்புரியும். வினைஞர்தம் - தொழிலாளர்களாகிய கொல்லர் களினுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. உலையின்-உலைக்கூடத்தில். முகம்-முன்னிடத்தில். பொதிபொதிந்த புடை-பக்கத்தில். மிடை-நெருங்கிய, கரியிடை கரிகளின் நடுவில்; ஒருமை பன்மை மயக்கம். கரி-அடுப்புக்கரி, தங்கிய-தங்கி உள்ள புகை-புகையை விடு-வெளிவிடு கின்ற தழலை-நெருப்பை நிகர்த்தன-ஒத்து விளங்கின. காக்கைகளின் விழிமணிகள் நெருப்பைப் போல விளங்கின என்றபடி, や、 .عام

அடுத்து வரும் 24-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'உறுதியான ஆயுதங்களை ஏந்திய வலிமையைப் பெற்ற வீரர்களினுடைய பிணங்கள் விழுந்து கிடக்கும் சிவந்த போர்க்களத்தில் முன்னால் சில வீரர்களுடைய உடம்புகளில் புண்கள் உண்டானபோது விழுகின்ற குடல் களைப் பொங்கி எழுத்த கழுகுகள் பருத்துகளோடு கவ்விக் கொண்டு எழுகின்ற சமயத்திலும் முன்னால் தாங்கள் புரியும் செயல்களிலிருந்து குறைதல் இல்லாதவர்களாகி, அவர்கள் தலை சிறந்து நின்று கொண்டிருந்தார்கள்; அவர்