பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 5

யான நம்பிக்கைகளை உண்டாக்கும் வீரட்டானேசுவரர் வழங்கிய திருவருளால் அளகாபுரிக்கு அரசனாகிய குபேரன் தன்னுடைய பெரிய நிதியத்தை எடுத்து உலகத்தின்மேல் நெருங்குமாறு எந்த இடத்திலும் தங்கம் குவிந்திருக்கும் குவியலையும், நெற் குவியலையும் ஒப்பு இல்லாத வேறு பல வளங்களையும் பொங்கி எழும் வண்ணம் நிலைபெற்று விளங்கும் பெரிய செல்வத்தை உண்டாக்கிக் குங்குலியக் கலயனாருடைய திருமாளிகையில் நெடுக இருக்குமாறு வைத்தான். பாடல் வருமாறு :

அன்பர் அங்கிருப்பு கம்பர் அருளினால் அளகை

‘. . . . வேந்தன்

தன்பெரு நிதியம் தூர்த்துத் தரணிமேல் நெருங்க

- - எங்கும் பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில்பல்

வளனும் பொங்க மன்பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில்

- 盘L。””

அன்பர்.வீரட்டானேசுவரருடைய பக்தராகிய குங்குலி துக் கலய நாயனார். அங்கு-அந்தக் கோயிலில் உள்ள கருவூலத்தில். இருப்ப-தங்கிக் கொண்டிருக்க. நம்பர்-தம் முடைய பக்தர்களுக்கு, 'இவரை வணங்கினால் நமக்குச் செல்வம் சேரும் ; நல்ல திருமாளிகை கிடைக்கும் ; நம் முடைய பெண்ணுக்கு அழகும் அறிவும் உள்ள வரன் கிடைப் பான் ; நம்முடைய புதல்வனுக்கு அழகும் கற்பும் உடைய கன்னிகை கிடைப்பாள் ; நமக்கு நல்ல வயல்கள் கிடைக்கும்; நல்ல நண்பர்கள் சேர்வார்கள் என்பவற்றைப் போன்ற நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய வீரட்டானேசுவரர். அருளினால்-வழங்கிய திருவருளால் அளகை-அளகாபுரிக்கு. வேந்தன்-அரசனாகிய குபேரன். தன்-தன்னுடைய. பெருபெரிய நிதியம்-நிதியை தூர்த்து-தன்னுடைய கருவூலத் திலிருந்து எடுத்து வந்து. த்:சந்தி. தரணி மேல்-இந்த உலகத் தின்மேல். நெருங்க-நெருங்கி இருக்குமாறு. எங்கும்-எந்த