பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 29

துவசத்தைப் பறக்கவிடும். பண்-இராகங்களோடு கூடிய * பாடல்களின் ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். பயில்-பாடுகின்ற, விஞ்சையர் - வித்தியாதரர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குமரரை-புதல்வர்களை ஒருமை பன்மை மயக்கம். வென்றனர் - வென்று விட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம். தங்களுடைய குடல்களைக் கழுகு களும் பருந்துகளும் கவ்விக் கொண்டு பறந்தபோதும் அந்த வீரர்கள் மகிழ்ச்சியோடே இருந்தார்கள் என்றபடி.

அடுத்து வரும் 25-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

இத்தகைய போர்க்களத்தில் நடந்த கொடிய யுத்தத் தில் இரண்டு கட்சிகளையும் சார்ந்த சேனையில் இருந்த வாளாயுதங்களை ஏந்திய வீரர்கள் கொடிய போர்க்களத் தில் இறந்து போன பிறகு, இறந்து போகாமல் எஞ்சி உயிரோடு இருந்த், தம்முடைய மற்றப் பல சேனை வீரர்கள்: பின்னால் வரத் தாம் முன்னால் பகைவர்கள் உள்ள போர்க் களத்தில் ஏனாதி நாத நாயனார் சினம் மூண்டு எழுந் தார். பாடல் வருமாறு : *

. இம்முனைய வெம்போரில் இருபடையின் வாள்வீரர் வெம்முனையில் வீடியபின் விடாது மிக்கொழிந்த தம்முடைய பல்படைஞர் பின்னாகத் தாம் முன்பு தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்தெழுந்தார்."

இம்முனைய-இத்தகைய போர்க்களத்தில் நடந்த, வெம்-கொடிய, போரில் - யுத்தத்தில். இரு படையின்ஏனாதி நாத நாயனாருடைய சேனையிலும் அதிசூரனுடைய சேனையிலும் போர் புரிந்த, படை: ஒருமை பன்மை மயக்கம். வாள்-வாளாயுதங்களை ஏந்திய, ஒருமை பன்மை மயக்கம். வீரர்-வீரர்கள்; ஒருமை பன்மை மயக்கம், வெம். கொடிய, முனையில் - போர்க்களத்தில், வீடிய-இறந்து போன. பின்- பிறகு, வீடாது.இறந்து போகாமல். மிக்குஎஞ்சி. ஒழிந்த-நின்றிருந்த தம்முடைய' என்றது. ஏனாதி நாயனாருடைய என்பதை. பல்-பல. படைஞர்-சேனை