பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 343

துணா மரம், மகிழ மரம், பவளமல்லிகை மரம், பூவரச மரம் முதலியவை. ச்: சந்தி. சோலை-பூம்பொழில். வேலிஎல்லையாக அமைந்த. த், சந்தி. திருப்பனந்தாளில்-திருப்பு னந்தாளை உருபு மயக்கம். சேர்ந்தார்-அடைந்தார்.

பிறகு உள்ள 26-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அருணஜடேசுவரரை நேராகத் தரிவிக்கும் விருப்பத் தினால் சோழ மன்னன் அடைந்த மன வருத்தத்தையும், தன்னுடைய ஆண் யானைகளோடும் தீங்கு இல்லாத படை வீரர்கள் புரியும் திருப்பணியினால் அந்தச் சிவலிங்கப் பெருமானார் நேராக நிமிராமையால் தரையின் மேல் களைத்துப் போய் விழுந்து சோர்வை அடைவதையும் பார்த்துப் பெரிய தவத்தைப் புரிந்த குங்குலியக் கலய நாயனார் தாமும் தம்முடைய திருவுள்ளத்தில் வருத் தத்தை அடைந்து. பாடல் வருமாறு:

' காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றி - - னோடும் தீதிலாச் சேனை செய்யும் திருப்பணி நேர்ப டாமை மேதினி மிசையே எய்த்து வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி மாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம்

எய்தி .'

இந்தப் பாடல் குளகம். காதலால்-அருணஜடேசுவரரை நேராக நிமிர்த்தித் தரிசிக்கும் விருப்பத்தினால். அரசன். சோழ மன்னன். உற்ற-அடைந்த வருத்தமும்-மனவருத் தத்தையும். களிற்றினோடும்-தன்னுடைய ஆண்யானை களினோடும்; ஒருமை பன்மை மயக்கம். தீது-ஒரு தீய குணமும். இலா-இல்லாத இடைக்குறை. ச்: சந்தி. சேனைபடை வீரர்கள்; திணை மயக்கம். செய்யும்-புரியும். திருப்பணி-சிவலிங்கப் பெருமானை நிமிர்த்தச் செய்யும் திருப்பணிகளால் ஒருமை பன்மை மயக்கம். நேர்படாமைசிவலிங்கப் பெருமான் நேராக நில்லாமையினால், மேதினி மிசை-தரையின் மேல். ஏ: அசை நிலை. எய்த்து-செயலற்று.