பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 3F

அன்பர்தாம் - பக்தராகிய ஏனாதி நாத நாயனார். தாம்; அசைநிலை. எதிர்ந்த - பகைவர்களை எதிர்த்துப் போர் புரிந்த நாட்பின்கண் - போர்க்களத்தில், எஞ்சி-இறந்து போகாமல் மிஞ்சி. எதிர் - தமக்கு எதிரில், நின்ற-நின்று கொண்டிருந்த இகல் - பகைமையை வெளிப்படுத்தும். முனையில்-போர்க்களத்தில், வேல் - வேலாயுதங்களையே ஏராகக் கொண்டு; ஒருமை பன்மை மயக்கம், உழவர். போரிடுதலாகிய உழலைச் செய்யும் வீரர்களினுடைய; ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. சிரமும்-தலை களையும்; ஒருமை பன்மை மயக்கம். தோள்-தோள்களி னுடைய ஒருமை பன்மை மயக்கம். உரமும்-வலிமை யையும், தாள்-கால்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். உரமும்-வலிமையையும். தாம்' என்றது ஏனாதி நாத நாயனாரை, துணித்தார்-வெட்டிப் போக்கினார்.

பிறகு வரும் 27-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

போரிடுவதில் ஈடுபட்டவர்கள் யாவரும் எதிர்க்கட்சி

யில் உள்ள ஒப்பற்ற வீரர்கள் ஒச்சிய வாளாயுதங்களால் கொன்ல செய்யப்பட்டார்கள்; பகைவர்களோடு மோதாத வீரர்கள் கொலை செய்யும் போர்க்களத்தை விட்டு அகன்று நிலையாக உண்டான உண்மையான உணர்ச்சியாகிய ஞானம் உண்டான சமயத்தில் அலைத்தலை உடைய ஆசை முதலிய குற்றங்களைப் போல ஆனார்கள். பாடல் வருமாறு : - " தலைப்பட்டார் எல்லாரும் தனிவீரர் வாளிற்

கொலைப்பட்டார் முட்டாதார் கொல்களத்தை விட்டு

கிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்

அலைப்பட்ட ஆர்வம் முதற் குற்றம்போல் ஆயினார்.

தலைப்பட்டார்-போரிடுவதில் ஈடுபட்ட வீரர்கள்:

ஒருமை பன்மை மயக்கம். எல்லாரும்-யாவரும். தனி-எதிர்க்

கட்சியில் உள்ள ஒப்பற்ற, வீரர்-வீரர்கள்; ஒருமை பன்ம்ை மயக்கம். வாளில்-ஒச்சிய வாளாயுதங்களால்; ஒருமை