பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 பெரிய புராண விளக்கம்-4

"வேதியர் சேய்ஞலூர் விமலர், 'அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்டநம்பி., 'ஆண்டு கொண்ட அந்தணனார்.', 'நீற்றுக்கோல வேதியரும்.', 'அருமறை முனிவரான ஐயரை.', 'முதிர்மறை முனியாய் வந்தார்.”, 'அருந்திரு மறையோராகி அணைந்தீர்.” என்று சேக் கிழாரும், அறவாழி அந்தணன்." (திருக்குறள், 8) என்று திருவள்ளுவரும், இமையோர் போற்றும் அத்தணனை.' என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க. - * . பின்பு உள்ள 10-ஆம் பாடலின் கருத்து வருமாறு : 'பரவியுள்ள சமுத்திரம் சுற்றியிருக்கும் இந்த மண்ணுல கத்தை விளக்கத்தை அடையுமாறு புரிந்தருளிய இத்தகைய பான்மையை உடையவராகும் பெருமையைப் பெற்றவராகிய மானக் கஞ்சாற நாயனாருக்கு முன்பு சில தினங்கள் குழந்தையைப் பெறும் பர் க் கி ய ம் இல்லாமையினால் அரியாகிய திருமால் பன்றி உருவெடுத்துத் தேடியும் காண முடியாத வெற்றிக் கழல்களைப் பூண்ட செந்தாமரை மலர் களைப் போன்ற திருவடிகளைத் தெரிந்து கொள்ளாத தன்மையை அறியாதவராகிய அந்த நா ய ன எ ர் தமக்கு உண்டாகும் குழந்தையைப் பெறுவதற்காகத் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்ட சிவபெருமானுடைய திருவருளால் அந்த்ப் பெருமானைத் துதித்து வணங்கினார். பாடல் வருமாறு : - -

விரிகடல்சூழ் மண்ணுலகை விளக்கிய இத்

தன்மையராம் பெரியவர்க்கு முன் சிலநாட் பிள்ளைப்பே

- றின்மையினால் அரியறியா மலர்க்கழல்கள் அறியாமை அறியாதார் வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால்

- வழுத்தினார் ." விரி-பரவியுள்ள. கடல்-சமுத்திரம். சூழ்-சுற்றியிருக்கும். மண் உலகை-இந்த மண்ணுலகத்தை. விளக்கிய-விளக்கத்தை