பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 - பெரிய புராண விளக்கம்-4

இழைக்கும் வினைப்பயன் சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ் - சூழல் பிழைக்கும்நெறி தமக்குதவப் பெண்கொடியைப் - . பெற்றெடுத்தார்.'

குழைக்கு-சங்கக் குழைகளோடு உருபு மயக்கம்: ஒருமை பன்மை மயக்கம். அலையும்-அசையும். வடி-தாழ்ந்த. காதில்-திருச்செவிகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம்: உருபு மயக்கம். கூத்தனார்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானார். அருளால்-வழங்கிய திருவருளினால், ஏ. அசை நிலை. மழைக்கு உதவும்-மழையை வருவிப்பதற்கு உதவும். பெரும்-பெருமையைக் கொண்டிருக் கும். கற்பின்-கற்பை உடைய. மனைக் கிழத்தியார் தம்பால்-இல்லக் கிழத்தியாரிடத்தில், தம்: அசை நிலை. இழைக்கும்-முன்பிறவியில் செய்திருக்கும். வினை-பாவங் களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பயன்பிரயோசனம். சூழ்ந்த-சேர்ந்துள்ள. இப்பிறவி-இந்த மனிதப் பிறவியில் உண்டாகும். க், சந்தி. கொடும்-கொடுமையாகிய, சூழல்-நிலையிலிருந்து. பிழைக்கும்-விடுபடும். நெறி-வழியை. 'தமக்கு' என்றது மானக் கஞ்சாற நாயனாருக்கு என்றபடி. உதவ-உதவும் பொருட்டு. ப்: சந்தி. பெண் கொடியைபூங்கொடியைப் போன்ற ஒரு பெண் குழந்தையை. கொடி: உவம் ஆகுபெயர். பெண்களுக்குப் பூங்கொடியை உவமை யாகச் சொல்லும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. ப்: சந்தி. பெற் றெடுத்தார். பெற்றெடுத்து வளர்த்தார்.

மழைக்குதவும் கற்பு: தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை.' (திருக்குறள், 55) என்று திருவள்ளுவரும், 'வறனோடின் வையகத்து வான்தரும் கற்பினாள்.', 'அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே.' (கலித்தொகை 16; 20., 39:6) என்றும், கொண்டான் குறிப்பறிவாள்