பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 387.

எந்தமது மரபினுக்குத் தகும்பரிசால் ஏயும் எனச் சிந்தைமகிழ் வுறஉரைத்து மணம் நேர்ந்து

- செலவிட்டார்,

வ்ந்த-அவ்வாறு தம்முடைய திருமாளிகைக்கு வந்து சேர்ந்த மூதறிவோரை-முதிய அறிஞர்களை ஒருமை பன்மை மயக்கம். மானக் கஞ்சாறனார்-மானக் கஞ்சாற. நாயனார். முந்தை-முன்புள்ள முறைமையின்-தம்முடைய குடும்பத்தின் முறைப்படி. விரும்பி-விருப்பத்தை அடைந்து வரவேற்று. மொழிந்த-அவர்கள் கூறிய. மண-திருமணத் தைப் பற்றிய த்:சந்தி, திறம்-திறத்தை முறையை, கேட்டே -கேட்டு; ஏ: அசை நிலை. எந்தமது-எ ங் க ளு ைட ய: மரபினுக்கு.பரம்பரைக்கு. த், சந்தி. தகும்-தகுதியாக இருக்கும். பரிசால்-இயல்பினால், ஏ.யும்-இந்தத் திருமணம் பொருந்தும். என-என்று; இடைக்குறை. ச் சந்தி, சிந்தைதம்முடைய திருவுள்ளம். அவர்களுடைய உள்ளம்' எனலும் ஆம். மகிழ்வு-மகிழ்ச்சியை. உற-அடையும் வண்ணம். உரைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்து. மணம்-திருமணத் துக்கு. நேர்ந்து-தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து, செலஅந்த முதியவர்களைப் போகுமாறு: இடைக்குறை. விட்டார்-அனுப்பினார். - :

பிறகு உள்ள 18-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு போன முதியவர்களும் மானக் கஞ்சு, நாயனார் திருமணத்துக்குச் சம்மதித்த விண்ணத்தைக் கூற மலைகளைப் போன்ற தோள்களைப் பெற்ற ஏயர்களின் அரசரும் மிகவும் விருப்பத்தை அடைந்து நின்ற நிலையில் இரண்டு வீட்டினர்களுக்கும் சம்மதமாகிய திருமணமாகிய மங்கலச் செயலுக்கு ஒரு முகூர்த்த நாளை அறிவுள்ள சோதிட நூலில் வல்லமை பெற்ற சோதிடர் ஒரு வ ர். அமைத்துக் கொடுத்தார். பாடல் வருமாறு: .

சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்த படிசெப்பக் குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிகவிரும்பி