பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

எமது ஆத்ம குடும்ப நண்பரும், பிரபல எழுத்தாளரும் ஆன வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் அவர்களுடைய முதல் நூலான 'வ ழி கா ட் டி' என்ற நூல் எமது வெளியீடாக 50 ஆண்டுகளுக்கு முன் வந்தது. அப்போது தன் தாயாரிடம் ஆசி பெற்று எழுதத் தொடங்கினார். ஆனால் நூல் வெளிவருவதற்குள் அவருடைய தாயார் முருகனடியை அடைந்தார். அதே போல் அவருடைய கடைசி நூலான இந்தப் பெரிய புராணம் விளக்கம்' என்ற நூலை எழுதி முடித்து, அச்சில் வெளிவருவதற்கு முன்பே அன்னார் அவர்கள் முருகனடி சேர்ந்தார்.

தமிழ் நாட்டில் கதாசிரியர் பலர் : சிறந்த கட்டுரை எழுதுகிறவர் சிலர் , தீவிர இலக்கிய விமர்சனம் செய்பவர் சிலர் : பழந்தமிழைப் பே ா ற் றி வானளாவும் குரலில் பேசியவர் சிலர் ; இலக்கணப் புலிகள் சிலர் ; ஆனால், இவ்வளவு துறைகளிலும் வல்லவரான சி. வா. ஜ. வுக்கு நிகர் எவருமில்லை. பழமைக்கும் புதுமைக்கும் நீண்ட, செம்மை யான பாலமாகக் கி. வா. ஜ. விளங்கினார். இவருடைய இலக்கியம் மிகப் பரந்தது : ஆழ்ந்தது.

அவர் எழுதிய இந்நூல் எவருக்கும் விளங்கும் வகையில் எளிமையான, ஆற்றோட்டமான நடையில் விளக்கப் பட்டுள்ளது. ஈடு இணையற்ற உரையாசிரியராக கி. வா. ஜ. பிரகாசிக்கிறார். வாழ்க கி. வா. ஜ. வின் புகழ் ! ஒங்குக அவருடைய தமிழ் இலக்கியங்கள். *५,

-பதிப்பகத்தார்

குறிப்பு :

இந்து லில் 288-ம் பக்கத்திற்குப் பிறகு 0ே7 என தவறுதலாக அச்ச கியுள்ளது. இது 338-ம் பக்கம் முடிந்த பிறகு 321 என சரி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி தொடர்ச்சி சரியாக உள்ளது என்பதை வாச க ர் க ளு க் கு த் தெரிவித்துக் கொள்கிறோம்.