பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனா நாத நாயனார் புராணம் 45° என்பதைத் தம்முடைய வாயால் சொல்ல விரும்பாமல் சேக்கிழார் இவ்வாறு கூறினார். இவ்வாறே மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில், 'பத்திரம் வாங்கித் தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய' என்று பாடியிருக்கிறார். இந் நின்ற-இவ்வாறு நின்று கொண்டிருந்த தன்மை-அந்த நாயனாருடைய இ ய ல் ைப. அறிவார்-அறிபவராகி, முற்றெச்சம். அவர்க்கு-அந்த நாயனாருக்கு. அருள-தம்மு டைய திருவருளை வழங்க. மின்-மின்னலைப் போல. நின்றநிலைத்து நின்றிருக்கும்; காலமயக்கம். செம்-சிவந்த, சடையார்தாமே-சடாபாரத்தைத் தம்முடைய தலையில் பெற்றவராகிய நடராஜப் பெருமானாரே. தாம்: அசை நிலை. வெளிநின்றார்-வெளிப்பட்டு நின்றருளினார்.

பிறகு வரும் 41-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'இதற்குப்பின் இனிமேல் யாம் வாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது? தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய தலைவனாகிய நடராஜப் பெருமான் வழங்கிய திருவருளைப் பகைவர்களுடைய கைகளில் ஏந்திய வாளாயுதங்களால் பந்தபாசத்தை அறுத்தருளி இருப்பவராகிய ஏனாதி நாத நாயனாரை என்றைக்கும் தம்முடன் பிரியாமல் இருக்கும் அன்பை வழங்கியிருளி, பொன்னால் ஆகிய வளையல்களைத் தன்னுடைய திருக்கரங்களில் அணிந்து கொண்டிருக்கும் சிவகாம சுந்தரியைத் தம்முடைய வாமபாகத்தில் எழுந் தருளச் செய்திருக்கும் நடராஜப் பெருமானார் பொன்னம் பலத்தை அடைந்தருளினார். பாடல் வருமாறு:

மற்றினிகாம் போற்றுவதென்? வானோர் பிரான் • அருளைப் பற்றலர்தம் கைவாளால் பாசம் அறுத்தருளி உற்றவரை என்றும் உடன்பிரியா அன்பருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம்

பலம் அணைந்தார். ' மற்று: அசைநிலை. இனி-இதற்குப் பின் இனிமேல். நாம் -யாம்; இது சேக்கிழார் கூற்று. போற்றுவது-வாழ்த்து