பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 57

மலையிலிருந்து கொண்டு வந்த தேனையும், புழுக்கிய மாமிசத்தையும் தாங்கள் உண்ணும் உணவுகளாகக் கொண் டிருக்கும், விடத்தையும் நெருப்பையும் போலக் கொடியவை யாக இருக்கும் அம்புகளை உடைய வேடர்களுக்குத் தலைவன் நாகன் என்ற பெயரை உடையவன். பாடல் வருமாறு: - -

- மைச்செறிந் தனைய மேனி வன்றொழில் மற்வர் தம்பால் அச்சமும் அருளும் என்றும் அடைவிலார், உடைவன்

- தோலார், பொச்சையின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு

. கொள்ளும் நச்சழற் புகழி வேடர்க் கதிபதி நாகன் என்பான். '

மைச் செறிந்தனைய-மை சேர்ந்ததைப் போன்ற மேனிகருமையான உடம்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். வன்-கொடுமையான தொழில்-வேலைகளையும் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். மறவர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தம்பால்-தங்களிடத்தில், அ. ச் ச மு. ம்பயத்தையும். அருளும்-கருணையையும். என்றும்-எந்தக் காலத்திலும். அடைவு-சேர்தல். இலார்-இல்லாதவர்கள்: ஒருமை பன்மை மயக்கம்; இடைக்குறை. உடைதாங்கள் உடுக்கும் உடைகளாக: ஒருமை பன்மை மயக்கம், வன்தடித்த தோலார்-தோல்களைப் பெற்றவர்கள்; ஒருமை .பன்மை மயக்கம். பொச்சையின்-மலையிலிருந்து கொண்டு வந்த நறவும்-தேனையும். ஊனின் புழுக்கலும்-புழுக்கிய மாமிசங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். உணவுதாங்கள் உண்ணும் உணவுகளாக, ஒருமை பன்மை மயக்கம். கொள்ளும்-கொண்டிருக்கும். நச்சு-விடத்தையும், அழல்நெருப்பையும் போலக் கொடிய பகழி-அம்புகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். வேடர்க்கு-வேடர்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். அதிபதி-தலைவன். நாகன் என்பான்-நாகன் என்ற பெயரை உடையவன். -