பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.76 - பெரிய புராண விளக்கம்-4

என்று மாணிக்க வாசகரும், அணிமணி முறுவற் பவன் வாய்.” என்று திருமாளிகைத் தேவரும், பவளமே திரு வாய்.”, பவளவாய் மணியே.', 'பன்னகா பரணா பவன: வாய் மணியே.", பவள வாயவர் பணைமுலையும்.' என்று கருவூர்த் தேவரும், 'பவளம் செவ்வாய். என்று சேரமான் பெருமாள் நாயனாரும், பாலறா மதுரமொழிப் பவளவாயார்.", "நாசியும் பவள வாயும் நணிய பேரொளி யில் தோன்றும் நலத்தினை.", பவளவாய் மடவார்.” என்று சேக்கிழாரும், பவளவாயிர் வந்து காணிரே..” என்று பெரியாழ்வாரும், திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ." என்று ஆண்டாளும், பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா.', பவளவாய் அரங்கனார்க்கு." என்று தொண்ட்ர் அடிப்பொடி ஆழ்வாரும், பவளச் செவ்வாய்ப் பணை நெடுந்தோள்.', பவளவாயாள் என்மடந்தை' என்று வேறு ஆழ்வாரும், பவளச் செவ்வாயன் என்கோ.' என்று நம்மாழ்வாரும், பவழக் கடிகை பழித்த செவ்வாய்." (பெருங்கதை; 2, 15: 81) என்று கொங்கு வேளிரும், "இருங் கடற் பவளச் செவ்வாய் திறந்திலன்.', 'பவள வாயார் அமுதன்னார்.'(சீவகசிந்தாமணி, 658, 1656) என்று திருத் தக்க தேவரும், பாகு பொதிபவளம் திறந்து.', 'பவன் வாய்ச்சி தவளவா ணகைச்சி. (சிலப்பதிகாரம், 8:30, 12: 50) என்று இளங்கோவடிகளும், பாலுள பவளச் செவ்வாய் பனைமுல்ை.மெல்லியல். (உண்டாட்டுப் படலம், 50). 'துப்புறழ் துவர்வர்யின் துர்மொழி மயிலோடும்.' (வனம் புகு படலம், 26), பவளமும் கிடையும்.தவளமென்று ரைக்கும் வண்ணம்...வாய்." (நாடவிட்ட படலம், 49) என்று கம்பரும் பாடியருளியவற்றையும், பவளச் செவ் வாயோ' (சம்புவன் வதைப் படலம், 5) என்று உத்தர காண்டத்தில் வருவதையும் காண்க.

அடுத்து வரும் 3-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: திண்ணனார் போர் புரிவதும் கொடுமையான பார்வை, யைப் பெற்றதும்.ஆகிய புலியினுடைய ஆழமான வாயைப்