பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 89.

பான்மையில்-இவ்வாறு பல பொருள்களைத் தக்க முறையில், ச ைம த் து க் கொண்டு-சேர்த்து வைத்துக் கொண்டு. படைக்கலம்-பல வகையான ஆயுதங்க6ைா; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: வாள், ஈட்டி, வில், அம்பு, கோடரி முதலியவை. வினைஞர்-தொழிலாளர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஏந்த-தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள, த், சந்தி, தேன் அலர்தேன் மலரும். கொன்றையார்தம்-கொன்றை மலர் மாலையை அணிந்தவ ராகிய காளஹஸ்தி ஈசுவரருடைய தம்: அசைநிலை. திருஅழகிய, ச்: சந்தி. சிலை-வில் ஆகிய செம்-சிவந்த பொன்தங்கத்தால் அமைந்த, மேருவானது-மேரு என்னும் மலை யானது. கடலின்-பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் நட்டுக் கடைந்த போது. நஞ்சம்-ஆலகால விடத்தை. ஆக்கிட-எழும்படியாகச் செய்ய உண்டாக்க. அவர்க்கேஅந்தக் காளஹஸ்தி ஈசுவரருக்கே. பின்னும்-பின்பும். கானகாட்டில் வாழும். ஊன்-பன்றியின் மாமிசத்தை. அமுதம்திருவமுதாக ஆக்கும்-செய்யப் போகும். சிலையினைதிண்ணனாருடைய வில்லுக்கு உருபு மயக்கம். க், சந்தி. காப்பு-காப்புக் கட்டி. ச்: சந்தி. சேர்த்தார்-வேடர்கள் வைத்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 33-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'திண்ணனாருடைய வில்லுக்குக் காப்புக் கட்டும் உறுதியான புலியின் நரம்புகளால் அமைத்த அழகு மிக்க காப்பாகிய நல்ல கயிற்றை நாகனார் பெற்றெடுத்த தேவர் களினுடைய சாதியும் விளங்குவதற்கு அருமையான குணக் குன்றாகிய திண்ணனாருடைய அழகைப் பெற்ற முன் கையில் கட்டி மலையில் வாழும் மக்கள் ஆகிய குறவர்கள் எல்லோரும் வாழ்த்துக்களை எடுத்துக் கூறினார்கள்.' பாடல் வருமாறு: -

சிலையினைக் காப்புக் கட்டும் திண்புலி நரம்பித்

செய்த கலம்மிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்