பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - பெரிய புராண விளக்கம் - 5

வும்.” ( பெருங்கதை ) என்று கொங்கு வேளிரும், 'பந்: தெறிந்திளையர் ஆடு பூமியே.', 'வைத்த பந்தெடுத் தலும்.’’, 'பந்து புடை பாணியென.’, ‘பூம்பந்தாடும் அவளைக் காண்மின்.', 'கைத்தலங்கடுத்தடித்த பந்து., 'பால் நெடும் தீஞ்சொலாளோர் பாவை பந்தாடுகின்றாள்.”, பந்தட்ட விரலினார்.”. (சீவகசிந்தாமணி, 150, 151,806, 925. 1101, 1951, 2648) என்று திருத்தக்க தேவரும், 'பந்: தும் கழங்கும் பலகளவு கொண்டோடி.’ (பரிபாடல், 10, 107) என்று கரும்பிள்ளைப் பூதனாரும், வரிப்புனை பந். தொடு பாலை துங்க. (திருமுருகாற்றுப்படை, 68) என்று நக்கீரரும், 'பந்தும் பாவையும்.’’, 'பந்தும் பாவையும் பசுவரிப்புட்டிலும்.’’, 'பந்தொடு பாவைகள் தூங்கி.", ' வரியணி பந்தும்.”, வரிப்பந்து கொண்டொணத்தாய்.” என்று வேறு பல புலவர்களும், 'பந்தினை இளைய வர் பயி லிடம்.” (நாட்டுப் படலம், 18), பந்துகள் மடந்தையர் பயிற்றுவார்.” (நகரப் படலம், 45), பந்த ண விர வினாள் ஒருத்தி.” (உண்டாட்டுப் படலம், 34), கந்துகமெனக் கடி தெழுந்தெதிர் கலந்தான்." (மகுட பங்கப் படலம், 17)என்று. கம்பர் பாடியவற்றையும், 'பந்தாடி அங்கை நொந்தார்.’,

'பந்தாடித்தலை விண்டோட.’, 'பந்தாடும் மங்கையர் செங்கையற் பார்வையிற்பட்டு.”, 'பந்தாடலிற் கழங்காட லில்.’, 'பந்தாடியே மிதித்து.' என்று அருணகிரிநாதரும்:

பாடியருளியவற்றைக் காண்க. -

பிறகு வரும் 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'உண்மையான பொருளாகும் செந்தமிழ் நூல்களில் திகழும் உண்மையும் செம்மையும் கொண்ட பொருளையும் வழங்கியருளுபவராகிய திருவால வாயுடையார் திருக்கோயில் கொண்டிருக்கும் திருவாலவாயாகிய மதுரை மாநகரத்தில் அடியேங்களுடைய பிறப்பைப் போக்கியருளுபவராகிய சோமசுந்தர பெருமானார் ஒரு புலவராக வீற்றிருந்தருளிய தமிழ்ச் சங்கம் இருந்து விளங்கியது என்று கூறினால் அந்தப்.