பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் - 101.

எப்பற் றினையும் அறுத்தே றுகைத் தேறுவார்தாள் மெய்ப்பற் றெனப்பற்றி விடாத விருப்பின் மிக்கார்.' அப்பொன்-அந்தப் பொலிவைப் பெற்ற. பதி-சிவத்தல மாகிய மதுரை மாநகரத்தில். வாழ்-வாழும். வணிக-வணி கர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. குலத்துசாதியில், ஆன்ற அமைந்த. தொன்மை - பழமையோடு. -ச்: சந்தி. செப்பத்தகு - சொல்லத்தக்க. சீர்-சீர்த்தியைப் பெற்ற. க், சந்தி, குடி-வணிகர்களின் குடும்பம். செய்-முற் பிறவியில் புரிந்த, தவம் செய்ய - தவத்தின் பயனாகச் சேம்மை பெற. வந்தார்-திரு வவதாரம் செய்தருளியவர். எப்பற்றினையும்-எந்த வகையான பற்றுக்களையும்; ஒருமை .பன்மை மயக்கம், அவை அகங்கார மமகாரங்கள். அறுத்துஅறுத்து எறிந்து. ஏறு-இடபவாகனத்தை. உகைத்து-ஒட்டிக் கோண்டு. ஏறுவார்-அதன் மேல் ஏறி எழுந்தருளுபவராகிய சுந்தரேசப் பெருமானாருடைய, தாள்-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம் மெய்ப்பற்று-உண்மையான பற்றுக்கோடு" என-என்று எண்ணி; இடைக்குறை. ப்: சந்தி. பற்றி-அவற் றைப் பற்றிக் கொண்டு. விடாத-கைவிடாத விருப்பின். விருப்பத்தில். மிக்கார்-மிக்க சிறப்பைப் பெற்றவர் அந்த மூர்த்தி நாயனார். -

' பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு' என்று திருக்குறளில் வருவதைக் காண்க.

பிறகு வரும் 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ஒவ்வொரு நாளும் பெரியதாக இருக்கும் காதலும் நயப்பும் அடையும் விருப்பத்தால் தம்முடைய உறவினர். களும் துணைவர்களும் முதலாகிய கெடுதல் இல்லாத பதவி கள் யாவும் தம்மை ஆளாகக் கொள்ளும் பெருமானாகிய சோமசுந்தரப் பெருமானாருடைய திருவடிகளாகிய செந் தாமரை மலர்களை அல்லாமல் வேறு எதை யும் இல்லாதவர் பெ-7 -- -