பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பெரிய புராண விளக்கம்-5

உடையவரும், பரனாரும் ஆகிய சோம சுந்தரனாருடைய திருத் தொண்டராகிய மூர்த்தி நாயனாரைக் கருமையான கல்லை ஒத்த உள்ளத்தை உடைய வஞ்சகனாகிய அந்த மன்னன் கொடிய சமணர்களாகிய பெரிய இறுமாப்பு உடையவர்களுக்கு உடந்தையாக இருந்து பிறர் இகழும். செயல்களைப் புரிய நினைத்து. பாடல் வருமாறு:

செக்கர்ச்சடை யார்விடை யார்திரு வால வாயுள் முக்கட்பர னார்திருத் தொண்டரை மூர்த்தி யாரை மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண்பேர் எக்கர்க்குட னாக இகழ்ந் தன செய்ய எண்ணி' இந்தப் பாடல் குளகம். செக்கர்-செவ்வந்தி வானத்தைப் போலச் சிவந்த, ச்: சந்தி. சடையார்-சடாபாரத்தைத் தம் முடைய தலையின்மேற் கொண்டவரும். விடையார்-இடப வாகனத்தின் மேல் ஏறி ஒட்டுபவரும். திருவால வாயுள்மதுரை மாநகரத்தில் உள்ள ஆலயமாகிய திருவால வாய்க். குள். முக்கண்-மூன்று கண்களை உடையவரும். கண்: ஒருமை. பன்மை மயக்கம். பரனார்-பரனாருமாகிய சோமசுந்தரனா ருடைய, திருத்தொண்டரை-திருத்தொண்டராகிய, மூர்த்தி யாரை-மூர்த்தி நாயனாரை. மை-கருமையான. க்:சந்தி. கற்புரை-கருங்கல்லை ஒத்த, நெஞ்சு-உள்ளத்தை. உடை -உடைய, வஞ்சகன்-வஞ்சகனாகிய அந்த மன்னன். வெம்-கொடுமை யாகிய, சமண்-சமணர்களாகிய திணை மயக்கம். பேர்-பெரிய, எக்கர்க்கு-இறுமாப்பை உடையவர் களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். உடனாக-உடந்தையாக. இருந்து. இகழ்ந்தன.-சான்றோர். இகழும் செயல்களை. செய்ய-புரிய. எண்ணி-நினைத்து.

அடுத்து உள்ள 16-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'வஞ்சகனாகிய அந்த மன்னன் முடிவு இல்லா ஆனவாகும் துன்பங்களைப் புரியவும் பக்தராகிய அந்த மூர்த்தி நாயனார் பழங்காலத்தில் தோன்றிய முறைப்படி திருப்பணிகளைச் செய்யத் தவறாதவராகிப் புரிந்து வந்தார்; தம் தம்முடைய