பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மூர்த்தி நாயனார் புராணம் . 111

பாதகனாகிய அந்த மன்னன் இறந்து போக, உண்மையான

வேதங்களில் கூறப் பெற்ற நன்மையாகிய விபூதி யாகிய உயர்ச்சியைப் பெற்ற நல்ல வழியைத் தாங்கும் மேம்பாட் டையும் நல்ல இயல்புகளையும் பெற்றவராகிய உலகை ஆட்சி புரியும் வேந்தரைச் சார்ந்து வாழ்வது என்றைக்கோ?’’ என்று எண்ணி அந்த மூர்த்தி நாயனார் சார்ந்து இருப்பார்.' பாடல் வருமாறு:

' 'புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்

வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட வாய்மை வேத கன்மைத் திருநீற் றுயர்நன்னெறி தாங்கும் மேன்மைத் தன்மைப் புவிமன் னரைச் சார்வ தென்றென்று

சார் வார், '

புன்மை-புல்லிய தன்மையைப் பெற்ற ச்:சந்தி, செயல்செயல்களைச் செய்ய: ஒருமை பன்மை மயக்கம். வல்-வல்ல. அமண்-சமணர்களாகிய திணை மயக்கம். குண்டரில்-இழிந் தவர்களோடு; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம், போது-தன்னுடைய பொழுதை. போக்கும்-கழித்து வரும். வன்மை-வலிமையையும். கொடும்-கொடுமையையும் பெற்ற. 'ாதகன்-பாதகனாகிய அந்த மன்னன். பாதகன்-பாதகங் களாகிய செயல்களைச் செய்பவன். மாய்ந்திட-இறந்து. போக வாய்மை-உண்மையாகிய, வேத-வேதங்களில் கூறப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். நன்மை - நன்மை யாகிய, திருநீற்று-விபூதி என்னும். உயர் - உயர்ச்சியைப் பெற்ற, உயர்: முதல் நி ைலத் .ெ தா ழி ற் ெய ய ர். நல் - நல்ல. நெறி-வழியை. தாங் கு ம்-தாங்கியிருக்கும். மேன்மை-மேம்பாட்டையும். த்:சந்தி, தன்மை-நல்ல இயல்பு களையும் பெற்றவராகிய, திணை மயக்கம், தன்மை: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. புவி-இந்க உலகத் தைமன்னரை. ஆட்சி புரியும் வேந்தரை. ச்: சந்தி. சார்வது. சார்ந்து வாழ்வது. என்று-என்றைக்கோ. என்று-என எண்ணி. சார்வார்-சார்ந்து இருப்பார் மூர்த்தி தாயனார்.