பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பெரிய புராண விளக்கம்-5

பாலித்து-பரிபாலனம் புரிந்து. ஞாலம்-இந்த உலகத்தில் வாழும் மக்களை; இட ஆகு பெயர். கா ப் பா ன்அரசாட்சி செய்து பாதுகாக்கும் மன்னனுடைய. தன்: அசை நிலை. நெடும். உயரமான. குடைக்கீழ்-வெண் கொற்றக் குடையின் கீழ். த்: சந்தி. தத்தம்-தங்கள் தங்களுக்கு உரிய நெறிகளில்-வழிகளில். சரித்து-நடந்து. வாழும்-தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும். மன்னரை-அரசரை. இன்றிபெறுதல் இல்லாமல், வைகும் மண்ணுலகு-இந்த மண்ணுல கத்தில் வாழும் மக்களை; இட ஆகு பெயர். எண்ணும்நினைக்கும், காலை போது. இன்-இனிய. உயிர் இன்றி. உயிர் @ುಖTL೦ು. வாழும் யா க் ைக ைய - வ m ழு உடம்பை. ஒக்கும்.போல இருக்கும். என்பார்-என்று அந்த மந்திரிகள் கூறுவாரானார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு உவ்ள 30-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "இவ்வாறு பலவற்றையும் அந்த மந்திரிகள் எண்ணிப் பார்த்து, இந்த நாட்டில் இனிமேல் நாட்டைப் பாதுகாக் கும் மன்னர் இல்லை; நாம் புரியத்தக்கவிதம் இதுதான்"என்று r தெளிவை அடைபவர்களாகி, சிறப்பினால் மிக்கு விளங்கும் மையைப் போலக் கருமையாகவும். மலையைப் போல' ப்ெரியதாகவும் தோன்றும் ஒரு யானையினுடைய கண்களைக் கட்டி விட்டு அனுப்பினால் அந்தத் துதிக்கையை உடைய மலையைப் போன்ற யானை தன்னுடைய துதிக்கையினால் எடுத்துத் தன் மேல் வைத்துக் கொண்டவர் இந்த மண்ணுல கத்தில் வாழும் மக்களை அரசாட்சி புரிந்து பாதுகாக்கும் காவலை மேற் கொள்வார்' எனக் கூறி. பாடல் வருமாறு:

"இவ்வகை பலவும் எண்ணி, இங்கினி அரசர் இல்லை;

செய்வகை இதுவே." என்று தெளியவர்: சிறப்பின் மிக்க மைவரை அனைய வேழம் கண்கட்டி விட்டால் மற்றக் கைவரை கைக்கொண் டார்மண் காவல்கைக் * +. கொள்வார்.’ என்று. ’.