பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெரிய புராண ೧೧7ಹಹ೬–5

பிறகு வரும் 37-ஆம் பாடலின் கருத்து வருமாறு: கொடுமையான கண்களைப் பெற்ற அந்த ஆண் ti jff 63) Gðft யின் மேலிருந்தும் மூர்த்தி நாயனாரை அந்த மந்திரிகள் இறங்கச் செய்து தேன் நிரம்பிய மலர்களைக் கட்டிய மாலை களையும், ஒளியை வீசும் நவரத்தின மாலைகளையும், சுற்றி யுள்ள மகுடத்தைத் தலையில் அணியும் சாலையாகிய அழகிய இடத்திற்கு அந்த நாயனாரை அழைத்துக் கொண்டு சென்று. சிங்காசனத்தின் மேல் ஏறி அமரச் செய்து ஒற்றையாகிய சந்திர வட்டக் குடையின்கீழ் அரசர்களுக்கு உரிய காரியங். களை அந்த அமைச்சர்கள் ஆலோசித்துப் புரிபவர்கள் ஆனார்கள். பாடல் வருமாறு: .

வெங்கட்களிற் றின்மிசை கின்றும் இழிச்சி வேரித் தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி சூடு சாலை அங்கட்கொடு புக்கரி யாசனத் தேற்றி ஒற்றைத் திங்கட்குடைக் கீழ்உரிமைச்செயல் சூழ்ந்து செய்வார்." வெம்-கொடுமையாக இருக்கும். கண்-கண்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். களிற்றின்-அந்த ஆண் யானையின். மிசைநின்றும்-மேலிருந்தும். இழிச்சி-மூர்த்தி: நாயனாரை அந்த மந்திரிகள் இறங்கச் செய்து. வேரி-தேன் நிரம்பிய. த்:சந்தி. தொங்கல்-மலர்களைக் கட்டிய மாலை. களையும்; ஒருமை பன்மை மயக்கம். சுடர் -ஒளியை விரும். மாலைகள்-நவரத்தின மாலைகளையும். நவரத்தினங்க. ளாவன: மாணிக்கம், பதுமராகம், மரகதக்கல், புட்பராகம், வயிரம், வயிடூரியம். பவளம், முத்து, வெள்ளைக்கல் என்பவை. சூழ்-சுற்றியுள்ள முடி-மகுடத்தை, சூடு-தலை யில் அணிந்து கொள்ளும். சாலை-மண்டபமாகிய, அங்கண் -அழகிய இடத்திற்கு. கொடு-அந்த நாயனாரை அழைத் துக் கொண்டு. புக்கு-சென்று. அரியாசனத்து-சிங்காதனத் தில். ஏற்றி-மேல் ஏறி அமரச் செய்து. ஒற்றை-ஒன்றாக உள்ள. த்:சந்தி. திங்கட்குடைக் கீழ்-சந்திர வட்டக் குடை யின் கீழ், உரிமை-அரசர்களுக்கு உரிமையாக உள்ள.ச்:சந்தி.