பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெரிய புராண விளக்கம்-5

யார். செய்வார்-புரிவார். பெரியோய்-பெருமையைப் பெற்ற: வரே; ஒருமை பன்மை மயக்கம். என- என்று இடைக்குறை. ச்: சந்தி. சேவடி-செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த, அந்த நாயனாருடைய திருவடிகளை. அடி: ஒருமை பன்மை: மயக்கம். தாழ்ந்து-விழுந்து வணங்கி. செப்ப-கூற.

பிறகு உள்ள 41-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

இந்த உலகத்தை ஆட்சி புரிந்து நியாயத்தை நிலை நிற்கும் வண்ணம் புரிவேனானால் விளங்கும் விபூதியே அடி யேனுக்குப் புரியும் அபிடேகப் பொருளுமாக செழிப்பைப். பெற்ற அணிகலன்கள் ஐயனாகிய நடராஜப் பெருமா னுடைய அடையாளங்கள் ஆகிய உருத்திராக்கமாலை, சடா பாரம் முதலியவற்றைப் புனைந்து கொண்டு தரிக்கும் அழகு. மொய்த்த சிவந்த சடாபாரமாகிய பெருமையைப் பெற்ற, கிரீடமே மகுடமாகுக' என்று அந்த மூர்த்தி நாயனார். திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

' வையம் முறைசெய் குவனாகில் வயங்கு கீறே செய்யும் அபிடே கமுமாகச் செழுங்க லன்கள் ஐயன் அடையாளமுமாக அணிந்து தாங்கும் மொய்புன் சடைமா முடியேமுடி யாவ’ தென்றார்.' வையம்-இந்த உலகத்தை. முறை சய்குவன்-அடியேன் ஆட்சி புரிந்து நியாயத்தை நிலை நிற்கும் வண்ணம் புரி வேன். ஆகில்-ஆனால். வயங்கு-விளங்கும். நீறே-விபூதியே. செய்யும்-அடியேனுக்குப் புரியும். அபிடேகமுமாக-அபிடே கப் பொருளுமாக, ச். சந்தி. செழும்.செழிப்பைப் பெற்ற.. கலன்கள்-அணிகலன்கள். ஐயன்-ஐயனாகிய நடராஜப் பெரு மானுடைய. அடையாளமுமாக - அடையாளங்கள் ஆகிய உருத்திராக்க மாலை, சடாபாரம் முதலியவற்றை. அடை. யாளம்: ஒருமை பன்மை மயக்கம். அணிந்து-அடியேன் புனைந்து கொண்டு. தாங்கும்-தரிக்கும். மொய்-அழகு. மொய்த்த. புன்-சிவந்த சடை-சடாபாரமாகிய, மாபெருமையைப் பெற்ற முடியே-கிரீடமே. முடியாவது-மகுட