பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 14s,

கொண்டு. நலம்-நன்மைகளை ஒருமை பன்மை மயக்கம். கொள்-கொண்ட ஊழிக்காலம்-சர்வப்பிரளய காலம் வரை யிலும். உயிர்கட்கு-மக்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, புழுக்கள், பூச்சிகள், நீர்வாழ் பிராணிகள் முதலிய உயிர்களுக்கு. இ. டரான வரும் துன்பங்களானவற்றை: ஒருமை பன்மை மயக்கம். கடிந்து-போக்கி விட்டு. காத்துஅந்த உயிர்களை மூர்த்தி நாயனார் ஆட்சி புரிந்து பாது: காத்துக் கொண்டு.

பின்பு உள்ள 48-ஆம் பாடலின் கருத்து வருமாறு: மூர்த்தி நாயனார் தம்முடைய திருவடிகளைப் பிற நாடு' 'களை ஆட்சி புரியும் அரசர்கள் கலமாக வந்து வணங்கிவிட்டு வாழ்த்துக்களைக் கூறவும், குற்றங்கள் கட்டுப்படுத்தாத விதத்தில் இந்த உலகத்தில் வாழும் மக்களை ஆட்சி புரிந்து கொண்டு திருத்தொண்டிலிருந்து வேறுபாட்டைச் செய்யாத சோமசுந்தரக் கடவுள் வழங்கிய திருவருளால் பெருமையைப் பெற்ற அரசை ஆட்சி புரியும் பேற்றை அடைந்து தம்முடைய தலைவனாகிய சோமசுந்தரப் பெருமானுடைய வெற்றிக் கழலைப் பூண்ட செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளைத் தலைவராகிய அந்த மூர்த்தி நாயனார். அடைந்தார். பாடல் வருமாறு: . .

' பாதம்பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற

ஏதம்பிணி.யாவகை இவ்வுல காண்டு தொண்டின் பேதம்புரி யாஅருட் பேரர சாளப் பெற்று நாதன்கழற் சேவடி நண்ணினர் அண்ண லாரே...' பாதம்-தம்முடைய திருவடிகளை; ஒருமை பன்மை மயக் கம். பரமன்னவர்-பிற நாடுகளை ஆட்சி புரியும் அரசர்கள்: ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்து-தம்மை வலமாக வந்து. பணிந்து-வணங்கி விட்டு.போற்ற-வாழ்த்துக்களைக் கூறவும். ஏதம்-குற்றங்கள்; துன்பங்கள் எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். பிணியா வகை-தம்மைக் கட்டுப்படுத்தாக விதத் தில், இவ்வுலகு-இந்த உலகத்தில் வாழும் மக்களை; இட.