பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 143

அகலமான பாறையின்-கருங்கற் பாறையின் மேல். வைத்து முழங்கையை-வைத்துத் தம்முடைய முழங்கையை. அன்றுஅன்று ஒரு நாள். தேய்த்த இகல்-தேய்த்த பகையை. ஆர். பெற்ற, களிற்று-ஆண் யானையைப் பெற்ற, அன்பரைபக்தராகிய அந்த மூர்த்தி நாயனாரை. ஏத்தி-துதித்து விட்டு முருகனாராம் - முருக நாயனாராகும். முகில்-மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம், சூழ்-சுற்றித் தவழும். நறும் நறு மணம் கமழும் மலர்கள் மலர்ந்த பலவகை மரங்கள் வளர்ந்து நிற்கும். அந்த மரங்களாவன: தேக்கு மரம், வாகை மரம், *வங்கை மரம், வாழை மரவகைகள், மா மரம், பலா மரம், அரச மரம், பூவரச மரம், ஆல மரம், தென்ன மரம், பன மரம், மகிழ மரம், விளா மரம், தமால மரம், வில்வ மரம், வேப்ப மரம், புளிய மரம், பவழமல்லிகை மரம், வாத நாரா யண மரம், கடம்ப மரம், சண்பக மரம் முதலியவை. சோலை யின்-பூம்பொழிலினுடைய.மொய்-மொய்த்த, ஒளி-பிரகாசம். மாட மாடங்கள் உயரமாக நிற்கும்; ஒருமை பன்மை மயக் கம். வீதி-தெருக்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக் கம், ப்: சந்தி. புகலூர்-திருப்புகலூர் என்னும் சிவத்தவத் தில். வரும்-திருவவதாரம் செய்தருளும். அந்தணர் தம்வேதியராகிய முருக நாயனாருடைய தம்: அசை நிலை. திறம்-திருத்தொண்டின் வகையை. போற்றலுற்றாம்-யாம் இனிமேல் பாடத் தொடங்கினோம்.