பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பெரிய புராண விளக்கம் -5

யான நீர் நிறைந்த ஒரு பொய்கைக்குள் அந்த உருத்திர பசுபதி நாயனார் இறங்கி." பாடல் வருமாறு: -

  • கரையில் கம்பலை புள்ளொலிகறங்கிட மருங்கு பிரச மென்சுரும் பறைந்திடக் கருவரால் பிறழும் கிரைநெடும் கயல் நீரிடை நெருப்பெழுந் தனைய விரைநெகிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுள் மேவி.” இந்தப் பாடல் குளகம். கரை-வரம்பு. இல்-இல்லாத: கடைக்குறை. கம்பலை-முழக்கத்தை. புள்-பலவகையான பறவைகள்; ஒருமை பன்மை மயக்கம். அந்தப் பறவை களாவன: மீன் கொத்திப் பறவை, நாரை, கொக்கு முதலி யவை. ஒலி-கூவும் சத்தங்கள்; ஒருமை பன்மை மயக்கம். கறங் கிட-பேரொலியை எழுப்ப. மருங்கு-பக்கத்தில், பிரசம்தேனைக் குடித்து விட்டு. மென்-மென்மையான சுரும்பு-- வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். அறைந்திட-ாங்காரம் செய்ய. க்சந்தி. கரு-கருமையான வரால்-வரால் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிறழும்-புரண்டு ஒடுவதும்; வினை யாலணையும் பெயர். நிரை-வரிசையாக உள்ள. நெடும்-நீள İfff;" # இருக்கும். கயல்-கயல் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். நீரிடை-புனலில், நெருப்பு-தி. எழுந்தனைய-எழுந்தாற். போல விளங்கிய, விரை-நறுமணம். நெகிழ்ந்த-மலர்ந்து கமழ்ந்த, செங்கமலம்-செந்தாமரை மலர்கள் மலர்ந்திருக் கும்; ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையான நீர் நிறைந்த, பொய்கையுள்-ஒரு பொய்கைக்குள். பொய்கைமனிதர் ஆக்காத"நீர்நிலை, மேவி-அந்த உருத்திர பசுபதி: நாயனார் இறங்கி. - .

செந்தாமரை மலருக்கு நெருப்பு உவமை: தழல்தாமரை LITT.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "செந்தி மேல் எழும்பொழுது செம்மலர் மேல் வந்தெழுந்த, அந்தணன் போல் தோன்றினார்.’, 'பரந்தவிளை வயற். செய்ய பங்கயமாம் பொங்கெரியில்..' என்று சேக்கிழாரும், "தீப்பட மலர்ந்த கடவுள் ஒண்பூ" (பெரும்பாணாற்றுப்படை.