பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெரிய புராண விளக்கம்-5

களில்; ஒருமை பன்மை மயக்கம். நெலில்: இடைக்குறை. பெற்றன-தாம் கூலியாகப் பெற்ற சம்பா நெற்களைக் குத் திய அரிசிகளைக் கொண்டு. நாயனார்க்கு-தலைவராகிய சிவ பெருமானாருக்கு. ஒல்லை-விரைவில், இன்னமுதா-இனிய சுவையைப் பெற்ற திருவமுதாக க்: சந்தி. கொண்டு-படைத் துக் கொண்டு. ஒழுகுவார்-அந்தத் தாயனார் நடந்து வரலா யினார்.

பின்பு வரும் 10-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

உயர்ந்த நெல்வகையாகிய சாலி என்னும் நெற்பயிர் களின் கதிர்களைப் பிறருடைய வயல்களைத் தேடிச் சென்று அந்த வயல்களில் அறுத்த நெற்கதிர்களுக்குள் தாயனார் தாம் பெற்றுக் கொள்ளும் கூலி நெற்கள் எல்லாவற்றையும் அரிசிகளாகக் குத்தி அவற்றைத் திருவமுதாகச் சமைக்கச் செய்து சிவபெருமானாருக்குப் படைத்துக் கொண்டு கருமை யான குறுவை நெற்கதிர்களை அரிந்ததனால் தாம் பெற்ற கூலியாகிய குறுவை நெற்களைக் குத்தி அரிசிகளாக்கிச் சமைக்கச் செய்து அந்தச் சோற்றைப் பெற்றுக்கொண்டு உண்டு வருகின்ற காலத்தில் திருமாலுக்கும் பிரமதேவனுக் கும் பன்றியுரு எடுத்தும் அன்னப் பறவை வடிவெடுத்தும் முறையே நிலத்தைத் தோண்டிப் பார்த்தும், மேலே பறந்து பார்த்தும் திருவடிகளையும் திருமுடியையும் பார்ப்பதற்கு அரியவராகிய சிவபெருமானார் அந்த நிலையையும் போக் .கியருளுவாரானார். பாடல் வருமாறு:

“ சாலி தேடி அறுத்தவை தாம்பெறும்

கூலி எல்லாம் திருஅமு தாக்கொண்டு நீல நெல்லரி கூலிகொண் டுண்ணும்நாள் மால யற்கரி யார்அது மாற்றுவார்.' சாலி-உயர்ந்த நெல்வகையாகிய சாலி என்னும் நெற் பயிர்களின் கதிர்களை, ஒருமை பன்மை மயக்கம் ஆகு பெயர். தேடி-பிறருடைய வயல்களைத் ே தடிச்சென்று.அறுத் தவை-அந்த வயல்களில் அறுத்த நெற்கதிர்களுக்குள். தாம்