பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 189,

காரிரும்பின் சரிசெறிகைக்கருஞ்சிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென் குரைப்படக்கும் அரைக்கசைத்த

- இருப்புமணி.'" கூர்-கூர்மையான. உகிர்-நகங்களையும்; ஒருமை. பன்மை மயக்கம். மெல்-மென்மையான. அடி-கால்களையும் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். அளகின்-பெட்டைக் கோழிகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குறும்-சிறிய, பார்ப்பு-குஞ்சுகளின் ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. குழு-கூட்டம். ச்:சந்தி. சுழலும்-சுற்றி வந்து திரியும். வார்தோல்வார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பயில்-கிடக்கும். முன்றிலில்-அந்தக் குடிசைகளின் முற்றங்களில்; ஒருமை.

பன்மை மயக்கம். முன்றில்-இல்முன்; முன் பின்னாகத் தொக்க தொகை. நின்ற-நின்று கொண்டிருந்த வள்-பெரிய. உகிர்-நகங்களை உடைய, ஒருமை பன்மை மயக்கம்.

நாய்-பெண் நாய்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. துள்ளு-துள்ளிக் குதிக்கும். பறழ்-குட்டிகள்: ஒருமை பன்மை மயக்கம். கார்-கருமையான. இரும்பின்இரும்பினாற் செய்த. சரி-வளைகள்; ஒருமை பன்மை மயக் கம். செறி-செறிந்த கை-கைகளைப் பெற்ற ஒரும்ை. பன்மை மயக்கம். க்: சந்தி. கரும்-கரிய நிறத்தைக் கொண்டி ருக்கும். சிறார்-சிறுவர்கள். கவர்ந்து-அந்த நாய்க்குட்டி. களைக் கவர்ந்து கொண்டு. ஒடஆர்-ஒட நிரம்பியுள்ள. மென்-மெல்லிய. குரைப்பு-அந்த நாய்க்குட்டிகளின் குரைப் பின் ஒலியை. அரைக்கு-அந்தச் சிறுவர்கள் தங்களுடைய இடுப்புக்களில்; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். அசைத்த-கட்டியுள்ள. இருப்பு-இரும்பாலாகிய, மணி-மணி கள்; ஒருமை பன்மை மயக்கம். அடக்கும்-அடக்கி விடும். பிறகு வரும் 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "வன்மையாக உள்ள சிறிய தோலின் மேல் உழத்தி: தன்னுடைய குழந்தையை உறங்கச் செய்யும் நிழலைத் தரும்