பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 199.

அடுத்து உள்ள 6-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'திருப்புன்கூர் என்னும் சிவத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவலோக நாதனுடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை மிகவும் நந்தனார். தம்முடைய திருவுள்ளத்தில் தியானித்து விருப்பத்தோடும் தம்முடைய திருப்பணிகள் வேண்டியவற்றைப் புரிவதற்காக ஆவலோடு தீர்மானம் செய்து கொண்டு அந்த இடமாகிய ஆதனூரிலிருந்தும் வருத்தத்தை அடையும் விருப்பத்தோடு வந்து அந்தத் திருப்புன்கூரின் பக்கத்தை அடைந்தார்.’ பாடல் வருமாறு:

  • திருப்புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிகநினைந்து

விருப்பினொடும் தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே அருத்தியினால் ஒருப்பட்டங் காதனுர் தனில்கின்றும் வருத்தமுறும் காதலினால் வந்தவ்வூர் மருங்

- கணைந்தார்.' திருப்புன்கூர்-திருப்புன்கூர் என்னும் சிவத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். ச்: சந்தி. சிவலோ கன்-சிவலோகநாதனுடைய சேவடிகள்-செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்த திருவடிகளை. மிக-மிகவும். நினைந்து-தம்முடைய திருவுள்ளத்தில் தியானித்து. விருப்பி னொடும்-விருப்பத்தோடும். தம்-தம்முடைய பணிகள்திருப்பணிகள்.வேண்டுவன-வேண்டியவற்றை. செய்வதற்குபுரிவதற்காக. ஏ. அசை நிலை. அருத்தியினால்-ஆவலோடு: உருபு மயக்கம். ஒருப்பட்டு-தீர்மானம் செய்து கொண்டு. அங்கு-அந்த இடமாகிய, ஆதனூர்தனில் நின்றும்-ஆதனூரி லிருந்தும். தன்: அசை நிலை. வருத்தம் உறும்-வருத்தத்தை அடையும். காதலினால் விருப்பத்தோடு, உருபு மயக்கம். வந்து அவ்வூர்-வந்த அந்தத் திருப்புன்கூருக்கு. மருங்கு-பக். கத்தை. அணைந்தார்.அந்த நந்தனார் அடைந்தார்.

திருப்புன்கூர்: இது சோழ நாட்டில் உள்ள தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சிவலோகநாதர். அம்பிகை