பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 201

பின்னும் பிழைதவிர்த் தீர் அறு வேலிகொள் பிஞ்ஞகனே.” என வருதலைக் காண்க. கலிக்காம நாயனாருடைய திருவவதாரத் தலமாகிய திருப்பெருமங்கலம் திருப்புன் கூருக்கு அருகில் இருக்கிறது.

இத்தலத்தின் விருட்சம் புன்க மரம். பிறகு உள்ள 17-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சீர்த்தி ஏறி வரும் சங்கீத உருப்படிகளைப் பாடி கொண்டு திருத்தொண்டராகிய நந்தனார் அழகிய கோபுர வாசலில் நின்று கொண்டு சிவலோக நாதனை நேரே கும் பிட்டு வணங்க வேண்டும் என்று எண்ணிய அந்த நாயனா ருக்கு அந்த எண்ணத்தின்படி செய்வாராகி மேகங்கள் ஏறித் தவழும் திருமதிலைப் பெற்ற திருப்புன்கூரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவராகிய தம்முடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்ற சிவலோக நாதர் தம்முடைய அழகிய சந்நிதியில் இருந்த பெரிய நந்தியை விலகுமாறு திரு. வருளை வழங்கியருளி நந்தனாருக்குத் தம்மைத் தரிசிக்கும் வண்ணம் செய்தருளினார். பாடல் வருமாறு:

" சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்

நேரேகும் பிடவேண்டும் எனநினைந்தார்க் கதுநேர்வார் காரேறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு பேரேற்றை விலங்கஅருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்.' சீர்-சீர்த்தி, ஏறும். ஏறி வரும். இசை-சங்கீத உருப்படி களை ஒருமை பன்மை மயக்கம். பாடி-பாடிக் கொண்டு. த்:சந்தி. திருத்தொண்டர்-திருத்தொண்டராகிய நந்தனார். திரு-அழகிய வாயில்-கோபுர வாசலில் நின்று கொண்டு. நேரே-சிவலோகநாதரை நேராகவே, கும்பிட வேண்டும்-கும் பிட்டு வணங்கவேண்டும். என-என்று; இடைக்குறை. நினைந் தார்க்கு-எண்ணிய அந்த நாயனாருக்கு. அது-அந்த எண் ணத்தின்படி. நேர்வார்-செய்வாராகி; முற்றெச்சம். கார்" மேகங்கள் ஒருமை பன்மை மயக்கம். ஏறும்-ஏறித் தவழும். எயில்-திருமதிலைப் பேற்ற. புன்கூர்-தி கு ப் பு ன் கூ ரி ல்