பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 205.

தா ரி ன ர்.', கொன்றை பொன்னென மலர்தரு.’’, 'கொன்றை பொன் சொரியும்.’’, பொன்னினார் கொன் றையும்.', 'பொன்னினார் கொன்றை யிருவடம் கிடந்து.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'பொன் திகழ் கொன்றை மாலை,','பொன் திகழ் கொன்றைமாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்.', 'பொன்னங் கொன்றை யும் ', 'பொன் கலந்த நறும்கொன்றை சடைமேல் வைத் தார்.', 'பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி..", 'பொன்காட்டக் கடிக்கொன்றை. என்று திருநாவுக்கரசு. நாயனாரும், பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடை மேற் பொலிந்திலங்க.', 'பொன்னவிலும் கொன்றையி னாய்.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், பொன்னின் மின்னுகொன்றை அலங்கல்.” என்று மாணிக்க வாசகரும்,

"பொன்னிதழ்க் கொன்றை.', 'பொன்னவில் கொன்றை. யார் தம் திருநீறு.”, “பொன்தயங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர்.', 'பொன்னாரிதழி முடியார்.'"

என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"இந்தப் பான்மையில் பரமேசுவரர் மகிழ்ந்து கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவத்தலங்கள் பலவற்றிற்கும் நந்தனார் எழுந்தருளி அந்தத் தலங்களில் விளங்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டு உண்மையான திருத் தொண்டுகளைப் புரிந்து கொண்டு நடப்பாராகி மிகுதியாக, அமைந்து பக்தி எழுந்த திருவுள்ளத்தோடும் அழகிய தில்லை. யாகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற். றம்பலத்துக்கு எழுந்தருளி நடராஜப் பெருமானாரை வணங் கும்படி தம்மைச் செலுத்திய பெருகியிருக்கும் விருப்பமாகிய, உணர்ச்சி போகாமல் வந்து தம்முடைய திருவுள்ளத்தில் தோன்ற." பாடல் வருமாறு: